Automobile Tamilan

ரூ.8.49 லட்சத்தில் 2020 ஹோண்டா WR-V எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

2020 Honda WR-V
2020 Honda WR-V

பிஎஸ்-6 இன்ஜின் பெற்று 2020 ஹோண்டா WR-V காரின் தோற்ற அமைப்பில் சில குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பெற்று SX மற்றும் VX என இருவிதமான வேரியண்டை பெற்றுள்ளது.

ஹோண்டா WR-V ஃபேஸ்லிஃப்ட் காரில் 110 ஹெச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 90 ஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.

1.5 லிட்டர் டீசல் லிட்டருக்கு 23.7 கிமீ மற்றும் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 16.5 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டபிள்யூ-ஆர்வி காரின் தோற்ற அமைப்பில் முன்புறத்தில் மிகவும் நேர்த்தியான புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பர் பெற்று கருப்பு நிறத்திலான பாடி கிளாடிங் இணைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் தோற்ற மாற்றங்கள் இல்லை.

புதுப்பிக்கப்பட்ட இன்டீரியரியல் இப்போது புதிதாக DIGIPAD 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ட்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே பெற்றுள்ளது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.

டபிள்யூஆர்-வி காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, ரியர் கேமரா உடன் பார்க்கிங் அசிஸ்ட் கொண்டுள்ளது. பாதாசாரிகளுக்கான பாதுகாப்பினை வழங்கும் நுட்பத்தை பெற்றுள்ளது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பட்டியல்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Exit mobile version