2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்ட நான்கு மாதங்களில் 20,000 யூனிட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 55,000 க்கு அதிகமான முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா மார்ச் மாதம் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், கோவிட்-19 பரவலால் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு உற்பத்தி பாதிகப்பட்டிருந்த நிலையிலும் தொடர்ந்து கிரெட்டாவின் மீதான இந்தியர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்தே உள்ளது. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள கார்களில் 60 சதவீத எண்ணிக்கை டீசல் கார்களுக்கு பெற்றுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கிரெட்டா காருக்கான முன்பதிவை பெரும்பாலானோர் டீல்ர்களை விட ஆன்லைன் (“Click to Buy”) மூலமாகவே அதிகம் மேற்கொண்டுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிஎஸ்6 ஆதரவுடன் கூடிய மூன்று என்ஜினை பெற உள்ளது. குறிப்பாக இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜினை பெற்றுள்ளது. அதன் விபரம் அட்டவனையில் பின்வருமாறு ;-
| என்ஜின் | பவர் | டார்க் | கியர்பாக்ஸ் | மைலேஜ் |
| 1.5L பெட்ரோல் | 115 PS | 144 Nm | 6 வேக MT | 16.8 km/l |
| 1.5L பெட்ரோல் | 115 PS | 144 Nm | CVT | 17.1 km/l |
| 1.4L டர்போ பெட்ரோல் | 140 PS | 242 Nm | 7 வேக DCT | 16.8 km/l |
| 1.5L டர்போ டீசல் | 115 PS | 250 Nm | 6 வேக MT | 21.4 km/l |
| 1.5L டர்போ டீசல் | 115 PS | 250 Nm | 6 வேக AT | 18.3 km/l |
ரூ.9.99 லட்சம் துவங்குகின்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி விலை அதிகபட்சமாக ரூ.17.20 லட்சம் வரை கிடைக்கின்றது. இந்த கார் மாடல் கியா செல்டோஸ், எக்ஸ்யூவி 500, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.


