2020 ஹூண்டாய் வெர்னா காரின் விபரம் வெளியானது

 

வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள 2020 ஹூண்டாய் வெர்னா காரின் முதல் முறையாக டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. வெர்னாவின் தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்டிரியர் பற்றி எந்த தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் இப்பொழுது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று என்ஜின் ஆப்ஷன் பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகும்.

வெளிப்புறத்தில் இந்த காரின் முன்புற கிரில் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, எல்இடி ஹெட்லைட் மற்றும் இணைந்த எல்இடி டிஆர்எல் உடன் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் புதிதாக டூயல் டோன் நிறத்தில் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டெயில் லைட் புதுப்பிக்கப்பட்டு, பம்பரும் தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரின் பற்றி எந்த தகவலும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாக நிலையில்,  4.2 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த ப்ளூ லிங்க் டெக்னாலாஜி அம்சத்தைப் பெற உள்ளது.

வென்யூ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா கார்களில் உள்ள 1.0 T-GDI பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 120 ஹெச்பி பவருடன் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். அடுத்தப்படியாக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வந்துள்ளது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசுகி சியாஸ், வரவுள்ள புதிய ஹோண்டா சிட்டி போன்றவற்றை நேரடியாக எதிர்கொள்ள உள்ள வெர்னா காரினை ஏப்ரல் மாதம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Exit mobile version