Automobile Tamil

2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் வெளியானது

2020 மஹிந்திரா தார்

இந்தியாவின் பிரபலமான 2020 மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் வெளியாகியுள்ளது. தார் எஸ்யூவியில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் பிஎஸ் 6 என்ஜின் போன்றவை பெற்றிருக்கும்.

ஹார்டு டாப் கொண்ட புதிய தார் எஸ்யூவி காரின் தோற்றம் முற்றிலும் மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. அதே போல கூடுதலாக என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவை அதிகரிக்கப்பட்டதாக அமைந்திருக்கலாம்.

2020 மஹிந்திரா தார்

விற்பனையில் உள்ள மாடல்களை விட அதிகப்படியான தோற்ற மாற்றங்களை பெற்றதாக வரவுள்ள புதிய தார் எஸ்யூவியின் முகப்பில் தொடர்ந்து தனது பாரம்பரியமான வில்லியஸ் ஜீப் (Willys Jeep) தோற்ற அமைப்பினை தொடர்ந்து புதிய மாடலும் 7  கோடுகளை கொண்ட ஸ்லாட் அமைப்பில், வட்ட வடிவ ஹெட்லைட் போன்றவை தக்க வைத்துக் கொண்டிருக்கும் என்பது சோதனை ஓட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்புற பம்பர், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பின்புற டெயில் விளக்கு மற்றும் ஸ்பேர் வீல் அமைப்பு போன்றவற்றில் மாற்றம் கொண்டதாக அமைந்திருக்கும். இன்டரியர் அமைப்பில் குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டு, தொடுதிரை டிஸ்பிளே உடன் நவீன டெக் வசதிகளையும் பெற்றிருக்கலாம்.

என்ஜின் பற்றி பெரிதாக எவ்விதமான விபரமும் வெளியாகவில்லை. ஆனால் BS 6 மாசு விதிகளுக்கு உட்பட்டதாக  2.5 லிட்டர் CRDe டீசல் என்ஜின் தொடர்ந்து பெற்றிருப்பதுடன் பவர் மற்றும் டார்க் அதிகரிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

image source – Facebook 4×4 India

Exit mobile version