Home Car News

2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

xuv500

முதன்முறையாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற 2020 மஹிந்திரா XUV500 எஸ்யூவி காரின் வீடியோ வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் புதிய எக்ஸ்யூவி 500 அறிமுகம் செய்யப்படலாம். தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500 காரானது முதலில் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு மேம்பாடுகளை பெற்றதாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

தற்பொழுது முற்றிலும் மேம்படுத்தப்பட்டு, புதிதாக வந்துள்ள டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையிலான வசதிகள் பெற்றிருப்பதுடன் தொடர்ந்து மஹிந்திராவின் எஸ்யூவி டிஎன்ஏ தாத்பரியத்தை பெற்று விளங்க உள்ளது. தற்காலிகமான ஹெட்லைட் மற்றும் சில முந்தைய மாடலின் பாகங்களை கொண்டும், புதிதாக பல்வேறு தோற்ற மாற்றங்களை பெற்றுள்ளது.

குறிப்பாக டோர் ஹேன்டில், வீல் ஆர்ச்சில் சிறிய அளவில் மாற்றங்கள், அகலமான முன்புற கிரில் சிறிய அளவிலான ஹெட்லைட் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளதால், மிகவும் ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லைட்டை பெறுவதுடன் எல்இடி ரன்னிங் விளக்குகளை இணைந்தே பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. அதாவது எக்ஸ்யூவி 300 காரில் உள்ளதை போன்றிருக்கலாம்.

இன்டிரியர் மராஸ்ஸோ காரில் உள்ளதை போன்றே அதைவிட மேம்படுத்தப்பட்டதாகவும், அதனை விட கூடுதலான வசதிகள், 7 இருக்கைகள் மற்றும் 5 இருக்கை என இரு விதமான சீட் லேஅவுட் பெற வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது வந்துள்ள சில கார்களில் உள்ளதை போன்றே கனெக்ட்டிவிட்டி வசதிகளும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பெற்று 180 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் என்ஜின் மற்றும் 140 ஹெச்பி பவரை வழங்கும் குறைந்த ஆற்றல் என்ஜினுடன் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உட்பட ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் கொண்டிருக்கும்.

முன்பே மஹிந்திரா-ஃபோர்டு அறிவித்திருந்த எஸ்யூவிகளில் ஒன்றாக எக்ஸ்யூவி 500 விளங்கும். இந்த எஸ்யூவி காரில் சில மாற்றங்களை செய்து ஃபோர்டு நிறுவனமும் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முறையாக 2020 மஹிந்திரா XUV500  வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

image source -timvix/youtube

Exit mobile version