ரூ. 73.70 லட்சம் விலையில் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் GLE விற்பனைக்கு வெளியானது

Mercedes-Benz GLE

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் வெளியிட்டுள்ள புதிய GLE ஆடம்பர எஸ்யூவி காரில் இரண்டு விதமான என்ஜினை பெற்று டாப் வேரியண்டின் விலை ரூ.1.25 கோடியாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

2 வது தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ மாடலில் மல்டி பீம் எல்இடி ஹெட்லேம்ப், 20 அங்குல அலாய் வீல், 4 மண்டல ஏசி கட்டுப்பாடு, பனோரோமிக் சன்ரூஃப், ஏர் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான பின்புற இருக்கைகள், 360 டிகிரி கேமரா, ஏழு ஏர்பேக்குகள் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் போன்ற அம்சங்களும் கிடைக்கிறது.

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான பெட்ரோல் GLE 300d 4மேட்டிக் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை பெறுகிறது. இந்த என்ஜின் 241 பிஎஸ் மற்றும் 500 என்எம்  டார்க்கை வழங்குகின்றது. இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.2 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

GLE 400d 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 330 பிஎஸ் மற்றும் 700 என்எம்  டார்க்கை வழங்குகின்றது. இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.2 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். இரு என்ஜின்களிலும் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ் 5, ஆடி கியூ 7 மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி போன்றவற்றை ஜிஎல்இ எஸ்யூவி எதிர்கொள்கின்றது.

2020 மெர்சிடிஸ் பென்ஸ் 300d விலை ரூ. 73.70 லட்சம்

2020 மெர்சிடிஸ் பென்ஸ் 400d ஹிப் ஹாப் வேரியண்டின் விலை ரூ. 1.25 கோடி