Automobile Tamilan

2020 ஸ்கோடா ஆக்டேவியா காரின் படம் கசிந்தது

Skoda-Octavia-Sketch

வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா செடான் ரக மாடலின் டீசர் வெளியானதை தொடர்ந்து காரின் டிசைன் படம் இணையத்தில் கசிந்துள்ளது. புதிதாக வந்துள்ள படத்தின் மூலம் காரின் தோற்ற அமைப்பு உறுதியாகியுள்ளது.

புதிய காரில் எக்ஸிகியூட்டிவ் செடான் ரக ஸ்கோடா சூப்பர்ப் காரின் தோற்ற வடிவமைப்பினை பின்புலமாக கொண்டு வரவுள்ள இந்த மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின்  MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு ஆக்டேவியா காரில் ஸ்பிளிட் ஹெட்லேம்பை நீக்கிவிட்டு தட்டையான ஒற்றை ஹெட்லேம்ப் யூனிட்டாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவான பம்பர், பக்கவாட்டில் ஸ்டைலிஷான லைன்களை பெற்றுள்ளது.

இன்டிரியர் அமைப்பின் படங்கள் தற்பொழுது வரை வெளியாகவில்லை. இந்த காரின் இன்டிரியர் அமைப்பு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு நேர்த்தியான டிசைனுடன், பல்வேறு நவீன அம்சங்களை பெற்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டிருக்கும். முந்தைய மாடலை விட மிக சிறப்பான இடவசதியை இந்த கார் வழங்க உள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா காரில் டீசல் என்ஜின் உட்பட பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷன்களை பெற உள்ளது. இந்த காருக்கு போட்டியாக டொயோட்டா கரோல்லா, ஹோண்டா சிவிக் மற்றும் ஹூண்டாய் எலன்ட்ரா போன்ற கார்கள் விளங்க உள்ளன. இந்தியாவில் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வெளியாகலாம்.

leaked image – skodacommunity.de

Exit mobile version