விரைவில்.., புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமாகிறது

0

2021 Force Gurkha

இந்தியாவின் மற்றொரு பிரபலமான ஆஃப் ரோடர் ஃபோர்ஸ் நிறுவனத்தின் கூர்க்கா எஸ்யூவி காரின் மேம்பட்ட மாடல் டீலர்களை வந்தடைந்துள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி காருக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவல்ல 2021 கூர்க்கா எஸ்யூவி முதன்முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. முந்தைய மாடலை விட தற்போது மேம்பட்ட அடிப்படையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் சில மாற்றங்கள் கூடுதல் வசதிகளும் பெற்றுள்ளது.

90 ஹெச்பி பவரை வழங்குகின்ற 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மட்டும் பெற்று 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டிருக்கும். ஆனால் போட்டியாளரான தார் கூடுதல் பவருடன் பெட்ரோல், டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக், மேனுவல் கியர்பாக்சினை பெற உள்ளது.

தோற்ற அமைப்பில் முன்புற பம்பர் புதுப்பிக்கப்பட்ட, எல்இடி டி.ஆர்.எல், எல்இடி டெயில் விளக்கு, புதிய டிசைன் அலாய் வீல், மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆரஞ்சு நிறம் பெற்றுள்ளது. இன்டிரியரில் மேம்பட்ட டேஸ்போர்டு கொடுக்கப்பட்டு தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டிருக்கும்.

image credit: Saboo Brothers/ Facebook