2021 ஜனவரி மாத விற்பனையில் 54 % வளர்ச்சியை பதிவு செய்த யமஹா

0

yamaha vintage fzs fi

2021 ஜனவரி மாதந்திர யமஹா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 54 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Google News

யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக தொடர் வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. அந்த வகையில் 2021 ஜனவரி மாதத்தில் 55,151 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ள நிலையில் முந்தைய 2020 ஜனவரி மாதத்தில் 35,913 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆதரவை பெற்ற மோட்டார்சைக்கிள் கனெக்ட் எக்ஸ் கொண்ட யமஹா FZ V3 டார்க் நைட் எடிசனில் வெளியிடப்பட்டது. இது தவிர இந்நிறுவனம் கஸ்டைஸ் யூவர் வாரியர் என்ற பிரத்தியாக கஸ்டமைஸ் எம்டி-15 பைக்குகள் வெளியாகியுள்ளது.

யமஹா பிஎஸ் VI மாடலின் தற்போதைய வரிசையில் 125 சிசி பிரிவில்
ஃபாசினோ, ரே இசட்ஆர் மற்றும் ரே இசட் ஸ்ட்ரீட் ரேலி மற்றும் ஸ்போர்டடிவ் மோட்டார் சைக்கிள்களில் 155 சிசி திறன் பெற்ற R15 V3.0, MT-15, FZ FI, FZS FI v3.0 மற்றும் 250 சிசி சந்தையில் FZ25, FZS 25 ஆகியவை கிடைக்கின்றது.