Automobile Tamilan

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகம்

2021 ஜீப் காம்பஸ்

2020 குவாங்சோ சர்வதேச மோட்டார் ஷோவில் புதுப்பிக்கப்பட்ட 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புள்ளது.

2021 ஜீப் காம்பஸ்

விற்பனையில் உள்ள காம்பஸ் காரை விட மாறுபட்ட தோற்ற அமைப்பில் பல்வேறு கூடுதல் டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முகப்பு அமைப்பில் வழக்கமான ஜீப் பாரம்பரிய 7 ஸ்லாட் கிரில் அமைப்பில் தேன்கூடு அமைப்பிலான இன்ஷர்ட்ஸ், புதிய ஹெட்லைட் உடன் இணைந்த எல்இடி டிஆர்எல், புதிய பம்பர், அகலமான ஏர் டேம் வென்ட் மற்றும் பனி விளக்கு அறை புதுப்பிக்கபட்டுள்ளது.

பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் இல்லாமல், புதிய வடிவத்திலான அலாய் வீல் இணைக்கப்பட்டு, பின்புற அமைப்பிலும் எந்த மாற்றும் இல்லாமல் டெயில்லைட் மற்றும் பம்பரில் சிறிய அளிவில் ஸ்டைலிங் மாற்றப்பட்டுள்ளது.

ஆஃப் ரோடு வெர்ஷன் மாடலான ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் வேரியண்டில் முன்புற கிரில் அமைப்பு, பம்பர் புதிதாக வழங்கப்பட்டு, கருப்பு மற்றும் சிவப்பு நிற கலவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி ட்ரையில்ஹாக் பேட்ஜ் உட்பட மாறுபட்ட அலாய் வீல் அமைந்துள்ளது.

முற்றிலும் இன்டிரியர் அமைப்பு மேம்படுத்தப்பட்டு டிஜிட்டல் கிளஸ்ட்டர், மிதக்கும் வகையிலான 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் FCA UConnect 5 கனெக்ட்டிவிட்டி ஆதரவுடன் அமேசான் அலெக்சா ஆதரவு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு இணைக்கப்பட்டு, ஏசி, ஹெச்விஏசி கன்ட்ரோல்கள் மாற்றப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் இன்ஜின் ஆப்ஷன்

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள பிஎஸ்-6 இன்ஜின் தொடர்ந்து பயன்படுத்தப்பட உள்ளது. காம்பஸ் டீசல் தானியங்கி 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டதாக இயங்குகிறது இப்போது பிஎஸ் 6 விதிமுறைகளை பூர்த்தி செய்கிறது. 170 PS பவர் வழங்க 3750 RPM மற்றும் 350 Nm டார்க் வங்க 1500-2500RPM-ல் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 9-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் செயல்படுகிறது. மேலும் கூடுதலாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில் 163 hp பவருடன்,  250 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்திய அறிமுகம் எப்போது ?

வரும் 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. புதிய 2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு போட்டியாக ஹூண்டாய் டூஸான், ஸ்கோடா கரோக் ஆகியவை விளங்குகின்றது.

web title : 2021 jeep compass facelift unveiled

Exit mobile version