Automobile Tamilan

2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் அறிமுகம்

முந்தைய கோஸ்ட் காரை விட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டதாக புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் வெளியிடப்பட்டுள்ள மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாகலாம்.

பழைய மாடலை விட முன்புற அமைப்பின் கிரில் மேம்படுத்தப்பட்டு, புதிதாக வழங்கப்பட்டுள்ள ஏர் டேம், சி வடிவ ரன்னிங் விளக்குகள், புதிதாக இணைக்கப்பட்டுள்ள லேசர் ஹெட்லைட் 600 மீட்டர் வரை வெளிச்சம் தொலைவு வெளிப்படுத்தும் திறனுடன் விளங்குகின்றது. கல்லீனன், பேண்டம் போன்றவற்றை வடிவமைத்த அலுமினியம் ஸ்பேஸ் ஆர்க்கிடெச்சர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் ஆடம்பர வசதிகளுக்கு குறைவில்லாத கோஸ்ட் காரில் மேற்கூரை நட்சத்திர வானத்தை வழங்கும் வகையில் 850 க்கும் மேற்பட்ட ‘நட்சத்திரங்கள்’ ஒளிரும் அமைப்பினை கொண்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் ஏற்கனவே வழங்கும் ‘ஸ்டார்லைட் ஹெட்லைனர்’ அம்சத்தை எதிரொலிக்கும் ஒளிரும் டாஷ்போர்டு பேனல் 152 எல்இடி லைட் பெற்றதாக புதிய கோஸ்ட் காரில் அமைந்துள்ளது.

காரின் கேபினில் எவ்விதமான இறைச்சலும் ஏற்படுத்தாமல் இருக்க 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் 100 கிலோ வரை ஒலியை கட்டுப்படுத்தும் அமைப்பினை கொண்டிருக்கிறது. அதன் ஆடியோ சிஸ்டம் 1300 வாட்ஸ் வெளிப்படுத்தும், 18 ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

புதிய கோஸ்ட் காரில் 6.75 லிட்டர் இரட்டை டர்போ வி12 இன்ஜின் அதிகபட்சமாக 563 பிஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் உருவாக்குகிறது. 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் ஆற்றல் அனுப்பப்படுகிறது.

2490 கிலோ எடையுள்ள போதிலும், கோஸ்ட் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்ட முடியும். அதே நேரத்தில் மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என்று ரோல்ஸ் ராய்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்திய சந்தைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை ரூ.5.5 கோடிக்கு கூடுதலாக அமையலாம். பல்வேறு கஸ்டமைஸ் ஆப்ஷனுக்கு ஏற்ப விலை அதிகரிக்கலாம்.

Exit mobile version