5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி

0

hyundai venue

பிரபலமான வென்யூ எஸ்யூவி விற்பனைக்கு வெளியிட்ட 5 மாதங்களில் 42,681 எண்ணிக்கையில் விநியோகம் செய்யப்பட்டு, தற்பொழுது வரை 75,000 முன்புதிவுகளை கடந்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ப்ளூலிங்க் டெக்னாலாஜியை பெற்ற டாப் வேரியண்டுகளுக்கு 50 % முன்பதிவு பெற்றுள்ளது.

Google News

மொத்தம் மூன்று விதமான என்ஜின்களில் கிடைக்கின்ற வென்யூ மாடலில் 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் லிட்டருக்கு 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

இரண்டாவதாக உள்ள பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகிறது. வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்)

வென்யூ டீசல் என்ஜின் தேர்வினை மட்டும் வழங்குகின்றது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது. இந்த என்ஜினில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. வென்யூ 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.70 கிமீ (மேனுவல்).

மேலும் படிங்க – ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை மற்றும் முழுவிபரம்

Hyundai venue interior

கடந்த 5 மாதங்களில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனையை விட 2,256 கார்களை கூடுதலாக விற்றுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு போட்டியாளரான மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரை விட 19,371 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. மற்ற போட்டியாளர்களான பிரபலமான ஈக்கோஸ்போர்ட் விற்பனை எண்ணிக்கை 17,137 ஆகவும், அதே வேளை டாடாவின் நெக்ஸான் விற்பனை எண்ணிக்கை 5 மாதங்களில் 16,016 ஆக உள்ளது.

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் எண்ணிக்கை (5 மாதங்கள்)
1. ஹூண்டாய் வென்யூ 42,681
2. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 40,425
3. மஹிந்திரா எக்ஸ்யூவி 300 19,370
4. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 17,137
5 டாடா நெக்ஸான் 16,016

ஹூண்டாய் புதிய விற்பனை மைல்கல்லைப் பற்றி பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் எஸ்.ஜே.ஹா, ” இந்தியாவின் நம்பர் 1 யூட்டிலிட்டி வாகனமாக வென்யூ முன்னேறியுள்ளது இது எங்களுக்கு பெருமை சேர்க்கும் தருணம் ஆகும். வென்யூ எஸ்யூவியின் முரட்டுத் தனமான தோற்றம் கொண்டு, ஓட்டுநர் அனுபவம் மற்றும் தடையற்ற இணைப்பு ஆகியவற்றை புதுப்பிப்பது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் சிறப்பான நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 மாதங்களுக்குள் 75,000 க்கும் மேற்பட்ட முன்பதிவு மற்றும் 42,681 மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு சான்றாகும். இந்தியாவின் முதல் கனெக்ட்டிவிட்டி எஸ்யூவியின் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதுமையான அம்சங்களை பெற்றுள்ளது ” என குறிப்பிட்டுள்ளார்.