Site icon Automobile Tamilan

இந்தியாவில் அறிமுகமானது புதிய ஹோண்டா சிஆர்-வி

ஹோண்டா நிறுவனம் தனது புதிய எஸ்யூவி காரான 2018 ஹோண்டா CR-V கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எஸ்யூவிகள் டொயோட்டா ஃபோர்டுனர், ஸ்கோடா கோடியாக், ஃபோர்ட் எண்டெவர் மற்றும் வோல்ஸ்வேகன் டைகுவன் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும். புதிய CR-V கார்கள் புதிய டிசைன்களுடன், சிறந்த இன்டீரியர்கள் மற்றும் ஏழு சீட் வசதிகளுடன் இந்திய மார்க்கெட்டில் வெளி வந்துள்ள முதல் கார் இதுவாகும். இதுமட்டுமின்றி ஹோண்டா நிறுவனம் டீசல் வெர்சன் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதும் இதுவே முதல் முறையாகும்.

இந்த புதிய காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரை, உறுதியான ஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது காருக்கு நேர்த்தியான தோற்றத்தை கொடுக்கும். இந்த எஸ்யூவிகளின் முன்புறத்தில் மெல்லிய குரோம் ஸ்டிரிப்கள் உள்ளது. இதில் தயாரிப்பாளரின் சிக்னேச்சர் இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்டிரிப்களின் முடிவில் LED ஹெட்லேம்கள் மற்றும் பனிகால லேம்ப்கள் முன்புற பம்பர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

முன்புறமாக பார்க்கும் போது இந்த கார் பெரிய கார் போன்று தெரியாது, ஆனாலும் பக்கவாட்டில் பார்க்கும் போது பெரிய கார் போன்று தோற்றம் அளிக்கும். காரின் பின்புறத்தில், லிப்ட்டேட் புட் மற்றும் L-வடிவ LED டைல்லேம்கள், இதற்கிடையே குரோம் ஸ்டிரிப் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் இடம் பெற்றுள்ள உபகரணங்களை பொறுத்தவரை, ஹோண்டா CR-V 2018 மாடல்களில் புதியதாக வடிவமைக்கப்பட்ட சென்டர் கன்சோல், கன்வேன்சனால் கண்ட்ரோல் மற்றும் உடனடியாக இயக்கும் புஷ்பட்டன் கண்ட்ரோல்கள் இடம் பெற்றுள்ளது.

காரின் உட்புறத்தில் பிரிமியம் அப்ஹோல்ஸ்டிரி மற்றும் இன்-கார் கண்ட்ரோல்கள் உள்ளன. மேலும் இதில் TFT LCD இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர் மற்றும் நேவிகேஷன் வசதிகளுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது கிராமின் கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம்கள் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி போன்றவற்றை இணைந்து கொள்ளும் வகையில் இருக்கும்.

புதிய ஹோண்டா CR-V கார்கள், 1.6 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் 118bhp ஆற்றலை உண்டாக்கும். அதிகபட்ச ஆற்றலில் 300Nm டார்க்கியூவை உருவாக்கும். இந்த இன்ஜின் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் பெடல் ஷிப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் வெர்சன் கார்கள் 2.0 லிட்டர் இன்ஜின்களுடன் 154bhp ஆற்றல் மற்றும் 192Nm டார்க்யூ-வை கொண்டுள்ளது. டீசல் வகை கார்கள் ஆல் வீல் டிரைவ் ஆப்சனுடனும். பெட்ரோல் வகை கார்கள் முன்புற வீல் டிரைவ் உடனும் வெளியாகியுள்ளது.

Exit mobile version