Automobile Tamil

புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகமானது

Hyundai Grand i10 Nios

இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், புதிய ஐ10 காரை ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) என்ற பெயரில் முற்றிலும் மேம்பட்ட மாடலாக பல்வேறு ஸ்டைலிங் சார்ந்த அம்சங்களுடன் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முன்பாக விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மேம்பட்ட மாடலாக வந்துள்ள கிராண்ட் ஐ10 நியோஸில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

காரின் தோற்ற வடிவமைப்பைப் பொறுத்தவரையில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் புதிய சாண்ட்ரோவின் தோற்ற உந்துதலை பின்பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகலமான பெரிய ‘கேஸ்கேடிங் கிரில்’ உடன் கூடிய ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் பெற்றதாக வரவுள்ளது. மேலும் கிரில் விளிம்புகளில் ஏங்குலர் தோற்றத்தை வெளிப்படுத்தும் எல்இடி ரன்னிங் விளக்குகளைவ பெற்றுள்ளது. மேலும், குரோம் பூச்சை பெற்ற கைப்பிடிகள் மற்றும் டூயல் டோன் அலாய் வீல்கள் நியோஸின் தோற்றத்திற்கு கூடுதல் கவனத்துடன் மேல் எழும்பும் வகையில் வளைவாக அமைந்துள்ளது.

கிராண்ட் ஐ10 நியோஸ் இன்டிரியரில் ஐவரி கிரே நிற கூட்டமைப்பினை கொண்டு மிக ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் நேர்த்தியான 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் தரமான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த மாடலில் நேர்த்தியாக ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய கிராண்ட் ஐ 10 நியோஸ் காரில் இரட்டை ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் பெறுவது உறுதியாகியுள்ளது.

தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது தலைமுறை புதிய கிராண்ட் i10 Nios காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது. புதிய மாடலின் விலை ரூ 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் விலைக்குள் அமையலாம்.

Exit mobile version