Home Car News

ரூ.9.80 லட்சம் விலையில் மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மிக சிறந்த மாடலாக புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு ரூ.9.80 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12.95 லட்சம் வரை வெளியிடப்படுள்ளது.

கோவிட்-19 பரவலுக்கு பங்களிப்பினை வழங்கும் நோக்கில் தார் எஸ்யூவி #1 மாடல் ஏலத்தில் விடப்பட்டு ரூ.1.11 கோடி வரை நிதி திரட்டப்பட்டுள்ளது. வென்ற ஏலத் தொகையின் ஒரு பகுதியை மஹிந்திராவின் தார் #1 மாடலுக்கு மின்டா செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை கோவிட்-19 நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாண்டி அறக்கட்டளை, ஸ்வேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பி.எம் கேர்ஸ் நிதி என இந்த மூன்று அமைப்புகளில் ஒன்றிற்கு நன்கொடை அளிக்கப்பட உள்ளது.

மஹிந்திரா தார் இன்ஜின்

தார் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 5000 RPM-ல் 150 ஹெச்பி பவர் மற்றும் 1500-3000rpm-ல் 320 என்எம் டார்க் (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 என்எம் டார்க் (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

தார் எஸ்யூவி வேரியண்ட் விபரம்

2021 தார் AX (அட்வென்ச்சர்) மற்றும் தார் LX (லைஃப்ஸ்டைல்) என இருவிதமான முறையில் கிடைக்கின்றுது.

வேரியண்ட் வாரியான முக்கிய வசதிகள்

தார் AX வேரியண்டில் நிரந்தரமான சாஃப்ட் மேற்கூறை, 6 இருக்கைகள் (2 முன்புறம்+ 4 பக்கவாட்டு அமைப்பில்), 16 அங்குல வெள்ளை நிற ஸ்டீல் வீல் கொண்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபெரன்சியல், பவர் ஸ்டீயரீங், பவர் விண்டோஸ், மற்றும் ரியர் பார்க்கிங் அசிஸ்ட் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரு தேர்விலும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கும்.

AX (O) வேரியண்டில் கன்வெர்டிபிள் டாப் அல்லது ஹார்ட் டாப், பின்புற இருக்கைகள் முன்புறம் நோக்கி இருப்பது போன்ற வடிவமைப்பு, ரிமோட் கீலெஸ் என்ட்ரி மற்றும் ஓட்டுநர் இருக்கை உயரம் அட்ஜெஸ்ட்மென்ட் உள்ளது.

LX மாடலில் ஏஎக்ஸ் வசதிகளுடன் கூடுதலாக கன்வெர்டிபிள் டாப் அல்லது ஹார்ட் டாப், 4 இருக்கைகள், டூயல் டோன் பம்பர், 18 அங்குல அலாய் வீல், எல்இடி ரன்னிங் விளக்கு, பனி விளக்கு, பிரீமியம் ஃபேபரிக் இருக்கைகள் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டயர்ட்ரானிக்ஸ், டயர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் HVAC, எலக்டரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

டீசல் என்ஜின் தேர்வில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் இடம்பெற்றிருக்கும். ஆனால் பெட்ரோல் தேர்வில் ஆட்டோமேட்டிக் மட்டும் அமைந்திருக்கும்.

மஹிந்திரா தார் விலை பட்டியல்

மஹிந்திரா தார் விலை

Variant Engine Seating & Top Configuration Price
AX Petrol Std 6-seater Soft Top INR 9.80 லட்சம்
6-seater Soft Top INR 10.65 லட்சம்
Diesel INR 10.85 லட்சம்
AX OPT Petrol 4-seater Convertible Top INR 11.90 லட்சம்
Diesel INR 12.10 லட்சம்
4-seater Hard Top INR 12.20 லட்சம்
LX Petrol INR 12.49 லட்சம்
Diesel 4-seater Convertible Top INR 12.85 லட்சம்
4-seater Hard Top INR 12.95 லட்சம்

 

 

web title : All new Mahindra Thar SUV launched price starts at Rs.9.80 lakh

Exit mobile version