Site icon Automobile Tamil

புதிய மாருதி சுஸூகி எர்டிகா கார் புக்கிங் நிலவரம்

கார் உட்பிரிவுகளில் ஒன்றான எம்பிவி ரக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் , மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு வெளியிட்ட 6 வாரங்களில் சுமார் 37,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

யுட்டிலிட்டி ரக சந்தையில் எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக மாடல்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மாருதியின் மிக சிறப்பான மாடலாக புதிய எர்டிகா இந்திய சந்தையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட 6 வாரங்களில் 37,000 முன்பதிவுகளை பெற்று காத்திருப்பு காலம் 2.5 முதல் 3 மாதங்களாக உள்ளது.

இதற்கு போட்டியாக தற்போது களமிறங்கியுள்ள மஹிந்திரா மராஸோ நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. பிரிமியம் ரகத்தில் வழக்கம் போல டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மாடலுடன் போட்டியிட இந்திய சந்தையில் மாடல்கள் இல்லை என்பதே உண்மையாகும். எம்பிவி சந்தையில் குறைந்த விலை டட்சன் ரெடி-கோ, ரெனோ லாட்ஜி போன்றவை பெரிதாக வாடிக்கையாளர்களை கவரவில்லை.

மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்ல Smart Hybrid Vehicle by Suzuki (SHVS) நுட்பத்தை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பெற்று விளங்குகின்றது.

105 hp ஆற்றல் மற்றும் 138 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் 4 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.  பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிமீ (மேனுவல்) மற்றும்  எர்டிகா பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.69 கிமீ (ஆட்டோமேட்டிக்)

90 hp ஆற்றல் மற்றும் 200 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் DDiS சீரிஸ் டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது. எர்டிகா டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.52 கிமீ ஆகும்.

புதிய எர்டிகா கார் விலை விபரம்

LXi Petrol MT – ரூ. 7.44 லட்சம்
VXi Petrol MT – ரூ. 8.16 லட்சம்
ZXi Petrol MT – ரூ. 8.99 லட்சம்
ZXi+ Petrol MT – ரூ. 9.50 லட்சம்

VXi Petrol AT – ரூ. 9.18 லட்சம்
ZXi Petrol AT – ரூ. 9.95 லட்சம்

LDi Diesel MT – ரூ. 8.84 லட்சம்
VDi Diesel MT – ரூ. 9.56 லட்சம்
ZDi Diesel MT – ரூ. 10.39 லட்சம்
ZDi+ Diesel MT –ரூ. 10.90 லட்சம்

(விற்பனையக விலை பட்டியல்)

Exit mobile version