இந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மிட்சுபிஷி நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி மாடலலுக்கு இந்தியாவில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் அவுட்லேண்டர் எஸ்யூவி விற்பனைக்கு வரக்கூடும்.

மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி

கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது தலைமுறை அவுட்லேண்டர் எஸ்யூவி தொடர்ந்து எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்திய சந்தையில் ஒற்றை வேரியன்டில் மட்டும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

7 இருக்கைகளை கொண்ட அவுட்லேண்டர் மாடலில் 167 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 4B12 2.4 லிட்டர் MIVEC பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 222 என்எம் இழுவைத் திறனை வழங்குவதுடன் ஆல் வீல் டிரைவ் அமைப்புடன் கூடிய சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் வசதி கொண்ட மாடல் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

மிக நேர்த்தியான டிசைனிங் மொழியை பெற்று கம்பீரமாக காட்சியளிகின்ற அவுட்லேண்டர் மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் விளக்கு, பகல் நேர ரன்னிங் விளக்கு ஆகியவற்றுடன், இன்டிரியரில் லெதர் இருக்கை, 6.1 அங்குல சென்டரல் டிஸ்பிளே, ராக்ஃபோர்டு சவுண்ட் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் இபிடி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

கருப்பு, நீலம், சிவப்பு, சில்வர், வெள்ளை, வெள்ளை சாலிட் மற்றும் டைட்டானியம் கிரே என மொத்தம் 7 நிறங்களில் கிடைக்க உள்ளது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்படும்.

Recommended For You