புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சஃபாரி எஸ்யூவி கார் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட கிராவிட்டாஸ் எஸ்யூவி பின்பு உற்பத்திநிலை மாடலாக வெளியாகும்போது ஐகானிக் பிராண்டான சஃபாரியை பெயரை பயன்படுத்தியுள்ளது. ஆனால் ஹாரியர் எஸ்யூவியின் தாத்பரியத்தை பின்பற்றியே வடிவமைத்துள்ளது.

டாடா சஃபாரி எஸ்யூவி

OMEGARC பிளாட்ஃபாரத்தில் ஹாரியர் எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பினை நினைவுப்படுத்துகின்ற புதிய சஃபாரி காரில் மிக நேர்த்தியான க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட டாடாவின் கிரில் அமைப்பு கவருகின்ற நிலையில் புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகள் அமைந்துள்ளன.

கனெக்டேட் நுட்பத்துடன் 8.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உட்பட கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டிருக்கின்றது.

2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி  பவர்மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். இந்த காருக்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய சஃபாரியில் XE, XM, XT, XT+, XZ, மற்றும் XZ+ என மொத்தமாக 6 வேரியண்டுகளை பெற்றுள்ளது. டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், 8.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 18 அங்குல மெசின்டு அலாய் வீல், பனோரமிக் சன்ரூஃப், ஹில் டீசனட் கட்டுப்பாடு, குழந்தை இருக்கை ஐஎஸ்ஓஃபிக்ஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் கட்டுப்பாடு ஆகியவை எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESP) பெற்றுள்ளது.

வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. விரைவில் விலை விபரம் அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version