Automobile Tamilan

எலக்ட்ரிக் மாடலாக “அம்பாசிடர் கார்” விற்பனைக்கு வெளியாகும்

அம்பாசிடர் கார்

இந்தியாவின் ஐகானிக் கார் என்ற பெருமையை பெற்ற ”அம்பாசிடர் கார்” உரிமைத்தை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தை கைப்பற்றிய பிஎஸ்ஏ குழுமம் கொண்டுள்ளது. சிட்ரோயன் பிராண்டில் முதல் எஸ்யூவி காரினை 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொஃடு வர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்சு நாட்டின் பிஎஸ்ஏ குழுமம், 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் மூலம் பிரபலமான அம்பாசிடர் கார் பிராண்டினை இந்நிறுவனம் தனதாக்கி கொண்டது.

அம்பாசிடர் எலக்ட்ரிக் கார் வருகை விபரம்

வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகார்வப்பூர்வ பத்திரிக்கையாளர் சந்திப்பினை இந்தியாவில் நடத்த உள்ள பிஎஸ்ஏ குழுமம் பல்வேறு முக்கிய அறிவிப்பைகளை வெளியிட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சிட்ரோயன் பிராண்டு கார்களை வெளியிட உள்ளதை உறுதி செய்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீச் கார்களுடன் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை சிட்ரோயன் வழங்க உள்ளது. மேலும் இநிறுவனத்தின் முதல் கார் மாடல் 2021 ஆம் ஆண்டு இறுதி மாதங்களில் அல்லது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்.

மேலும் இதே வருடத்தில் அம்பாசிடர் பிராண்டில் கார்கள் எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் அம்பாசிடார் காரானது ஆன்லைன் மூலம் மட்டும் விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மேலதிக முக்கிய விபரங்கள் நாளை நடைபெற உள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வெளிவரக்கூடும்.

மேலும் படிங்க- சிட்ரோவன் கார் வருகை விபரம்

Exit mobile version