ஆடி நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனங்களை நான்கு வாரங்களுக்கு பின்னர் ஷோ ரூம்களில் வைக்க திட்டமிட்டுள்ளது என்றும், இந்த கார்களில் சாப்ட்வேர் பிரச்சினை இருப்பதாகவும் ஜெர்மனை சேர்ந்த கார்கள் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஆடி நிறுவனத்தின் இ-டிரோன் மிட்சைஸ் எஸ்யூவி கார்களின் அறிமுகம் தாமதமாகியுள்ளது. இந்த கார்கள் புதிய கட்டுபாட்டு விதிகளை கிளியர் செய்ய வேண்டியுள்ளதாலும், சில சாப்ட்வேர் பிரச்சினைகள் உள்ளதாலும் இந்த தாமதம் ஏற்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆடி நிறுவனம் கடந்த மாதம் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த விழாவில் இ-டிரோன் கார்களை சர்வதேச அளவில் அறிமுகம் செய்தது.

இந்த கார்களில் ஏற்பட்டுள்ள சாப்ட்வேர் பிரச்சினை உள்ளதால் இந்த காரின் அறிமுகம் தாமதமாகும் என்ற தகவலை முதல் முறையாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த செய்திதாள் வெளியிட்டது. இந்த தகவலை நிறுவனத்தின் நெருக்கமான நபர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த செய்தில் இந்த காரின் அறிமுகம் சில மாதங்கள் தாமதம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த செய்தியில், இந்த காரின் பேட்டரி சப்ளை செய்யும் நிறுவனமான LG சேம் நிறுவனத்துடன் விலை குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

LG சேம் நிறுவனம் ஆடி நிறுவன வாகனங்களுக்கு எலட்ரிக் பேட்டரிகளை சப்ளை செய்கிறது. மேலும் இந்த நிறுவனம் வோக்ஸ்வாகன் மற்றும் டைம்லர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த தகவலை LG சேம் நிறுவனம் மறுத்துள்ளது.

LG சேம் நிறுவனத்தின் பேட்டரிகளுக்காக விலை அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலை ஆடி நிறுவன செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.