Site icon Automobile Tamilan

விழாகால கார்களுக்கான அதிரடி சலுகைகள் குறித்த விபரம் அறிய….

ஆண்டுதோறும் விழாகால சீசனிலும் கார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்ககார் டீலர்ஷிப்கள் குறைந்த அளவில் விற்பனையாகி வரும் மாடல்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்பார்கள். இந்த மாத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலைகளை கீழே காணலாம்.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் டீசல் வாங்கி ரூ. 6 லட்சம் வரை சேமியுங்கள்

ஸ்டாக்களை கிளியர் செய்யும் நோக்கில், பெரும்பாலான வகை கார்களுக்கு டீலர்கள் 6 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர். மெர்சிடிஸ் சி-கிளாஸ் கார்களின் இன்ஜின் உள்பட பல்லேறு வசதிகள் இடம் பெற உள்ளது. பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் மாடல்கள் மற்றும் வோல்வோ S60 ஸ்டைல், C220ds ஆகியவை 170hp, 2.2 லிட்டர் இன்ஜின்களுடனும், C250d கார்கள், 204hp வெர்சன்களுடன் ஒரே வகையான மோட்டார்களை கொண்டுள்ளது. ஸ்டாக்களை கிளியர் செய்யும் நோக்கில், பெரும்பாலான வகை கார்களுக்கு டீலர்கள் 6 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர்.

வோக்ஸ்வாகன் வென்டோ வாங்கி ரூ.1 லட்சம் வரை சேமியுங்கள்:

வோக்ஸ்வாகன் வென்டோ, மாடல் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வென்டோ கார்கள் பிரிமியன் குவாலிட்டி கேபின்களுடன், பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. மேலும் டீசல் DSG ஆட்டோமேட்டிக் வகைகளும் உள்ளன. டாப்-ஸ்பெக் வகைகளில் LED லைட்களையும் கொண்டுள்ளது.

டொயோட்டா கொரோலா அல்டிஸ் வாங்கி ரூ.1 லட்சம் வரை சேமியுங்கள்

டொயோட்டா கொரோலா அல்டிஸ் கார்கள், ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஜப்பான் நிறுவன பிராண்டின் பொதுவான பண்புகளை கொண்டுள்ளது. இந்த கார்கள், நம்பகத்தன்மை, விசாலமான உட்புறம் மற்றும் சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வகையிலும் உருவாகப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய கார்களை வாங்குவதை, இந்த கார்களை வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும். இந்த எக்சிகியூட்டிவ் செடான்கள் 140hp, 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் வகைகள் 88hp, 1.4 லிட்டர் மோட்டரை கொண்டதாக இருக்கும். இரண்டு வகைகளிலும், 6-ஸ்பீட் மெனுவல் கியர்களை கொண்டவையாக இருந்த போதிலும், பெட்ரோல் வகை மாடல்களில் CVT ஆட்டோமேட்டிக் ஆப்சன்கள் கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில், கார் தயாரிப்பாளர்கள் இந்த கார்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் வாங்கி ரூ. 90,000 லட்சம் வரை சேமியுங்கள்

எக்ஸ்சென்ட் கார்கள், டிசையர் மற்றும் அமெஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக உள்ளது. இதில் பிரிமியம் கேபின் மற்றும் ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு வசதிகளான EBD உடன் கூடிய ABS உள்பட பல்வேறு உபகரணங்களுடன் வெளியாகியுள்ளது. இந்த வசதிகள் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து வகைகளிலும் இடம் பெற்றுள்ளது. பெட்ரோல் ஆட்டோமேட்டிக்காக வகையிலும் கிடைக்கும். ஆனால்
ஹோண்டா அமெஸ் மற்றும் மாருதி சுசூகி டிசையர்களை போன்று அல்லாமல் இதில் டீசல் ஆட்டோ ஆப்சன்கள் இடம் பெறவில்லை. மெதுவாக விற்பனையாகி வரும் எக்ஸ்சென்ட் கார்களின் விற்பனையை அதிகரிக்க, தங்கள் அவுட்லெட்களில் 90 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடிகளை ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

டாட்டா ஸெஸ்ட் பிரேமியோ பதிப்பு வாங்கி ரூ.80,00 லட்சம் வரை சேமியுங்கள்

75hp, 1.3லிட்டர் டீசல் மோட்டார்களுடன் வெளியாகியுள்ள பிரேமியோ பேட்ஜ் கொண்ட ஸெஸ்ட் வகைகளுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. டாப்-ஸ்பெக் XT டிரிம்களுடனான க்ம்பெக்ட் செடான் வகைகள், டாட்டா ஸெஸ்ட் பிரேமியோ பதிப்பில், வெளிப்புறத்தில் பிளாக்-பினிஷ் வெளிப்புற கண்ணாடிக்ள், பூட் லிட், ஹுட் ஸ்டிரிப் மற்றும் ரூஃப், இத்துடன் பிளாக் பூட்-ஸ்பாயிலர்-களையும் கொண்டுள்ளது. இந்த காரின் கேபின்களில் புதிய சீட் ஃபேப்ரிக்களுடன் கண்களை ஈர்க்கும் தையல் வெவேலைப்பாடுகளுடனும், பிரேமியோ பிராண்ட்டிங் மற்றும் டான்-பினிஷ்களுடன் கூடிய சென்டர் டாஷ் போர்டையும் கொண்டுள்ளது.

ஹோண்டா சிட்டி வாங்கி ரூ.75,000 லட்சம் வரை சேமியுங்கள்

ஹோண்டா சிட்டி, மிகவும் பிரபலமான செடான் வகைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கார்கள், சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் வெர்னா கார்களுக்கு போட்டியாக உள்ளது. கூடுதலாக, வென்டோ, ரேபிட் மற்றும் யரிஸ் கார்களும் இந்த போட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளன. டாப்-ஸ்பெக் கார்கள் LED லைட்கள் மற்றும் சன் ரூஃப் மற்றும் தனித்துவமான அலாய் வீல் டிசைன்களுடன் கிடைக்கிறது. பொரும்பாலான இடங்களில், 119hp, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மாடல் கார்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 100hp, 1.5 லிட்டர் டீசல் வகைகளுக்கு 65 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா வாங்கி ரூ.60, 000 லட்சம் வரை சேமியுங்கள்

இன்றைய நிலையில், வெர்னா கார்கள் அதிகளவில் பரிந்துரை செய்யப்படும் கார்களாக இருந்து வருகின்றன. இந்த கார்கள் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. டாப்-ஸ்பெக் வகைளில் சன் ரூஃப் மற்றும் கூல்டு சீட்களும் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் ஆட்டோமேடிக் கார்களுக்கான வரிசையில் வெர்னா கார்கள் முன்னிலை பெற்றுள்ளன. விலை விபர பட்டியலை பொருத்து பல்வேறு பகுதியில், 128hp, 1.6 லிட்டர் டீசல் கார்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், 123hp, 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல்களுக்கான தள்ளுபடி 50 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி டிசையர் வாங்கி ரூ.50, 000 லட்சம் வரை சேமியுங்கள்

மாருதி சுசூகி காம்பேக்ட் செடான்கள், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. டிசையர் கார்கள், உயர்த்த தரம் கொண்ட பயணத்தை அளிப்பதுடன், அதிகளவிலான கேபின் ஸ்பேஸ்களை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, குறைந்த பட்ஜெட்டில் 83hp, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 75hp மற்றும் 1.3லிட்டர் டீசல் மில்களை கொண்டுள்ளது. இந்த இரண்டு மோட்டார்களும் 5-ஸ்பீட் AMT ஆப்சனுடன், 5-ஸ்பீட் மெனுவல் ஸ்டாண்டர்ட் ஆப்சனுடனும் கிடைக்கிறது. இந்த கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கபட்டுள்ளது

Exit mobile version