பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே விற்பனைக்கு அறிமுகம்

0

BMW 2 Series Gran Coupe

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே காரின் ஆரம்ப விலை ரூ.39.90 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டீசல் இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் பெட்ரோல் மாடல் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு வெளியாகலாம்.

Google News

எம் ஸ்போர்ட் மற்றும் 220d ஸ்போர்ட் லைன் என இரு வேரியண்டில் வந்துள்ள பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே காரில் 190 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டுள்ளது.

0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.5 விநாடிகளும், அதிகபட்ச வேகம் மணிக்கு 233 கிமீ எட்டும் திறனை கொண்டுள்ளது. ஈக்கோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் புரோ என நான்கு விதமான மோடுகளை கொண்டுள்ளது.

மாடர்ன் டிசைன் அம்சத்தை பெற்ற பிஎம்டபிள்யூ பாரம்பரிய கிரில் கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் இணைக்கப்பட்டு, பின்புறத்துல் எல் வடிவ எல்இடி டெயில் விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது. மேலும் கூபே ஸ்டைலை பெற்றிருந்தாலும் 6 அடி உயரம் உள்ளவர்களும் இலகுவாக பயணிக்கும் வகையில் ரூஃப் லைன் தலைப்பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

220d Sport Line – Rs. 39.30 லட்சம்

220d M Sport – Rs. 41.40 லட்சம்

(விற்பனையக விலை இந்தியா)

web title : BMW 2-Series Gran Coupe Launched

For the latest Tamil car and Truck News, follow automobiletamilan.com on TwitterFacebook, and subscribe to our YouTube channel.