இந்தியாவில் பிஎம்டபிள்யூ Z4 கார் விற்பனைக்கு அறிமுகம்

 பிஎம்டபிள்யூ Z4 கார்

ஆடம்பர கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய பிஎம்டபிள்யூ Z4 கன்வெர்டிபிள் ரக மாடல் இரு வகையில் விற்பனைக்கு வந்ததுள்ளது. இந்த கார் தற்போது sDrive20i M Sport மற்றும் M40i என இரு வேரியன்டுகளில் கிடைக்கும்.

டாப் M40i மாடலில் 3.0 லிட்டர் என்ஜின் மற்றும் sDrive20i எம் ஸ்போர்ட் காரில் 2.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கும். இரு மாடல்களிலும் பொதுவாக 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

பிஎம்டபிள்யூ இசட்4 காரின் சிறப்புகள்

டாப் பிஎம்டபிள்யூ Z4  M40i மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு ,  அதிகபட்சமாக 340 hp பவர், 500 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் திறன் 0 -100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.

பிஎம்டபிள்யூ Z4 sDrive20i எம் ஸ்போர்ட் காரில் 2.0லிட்டர் 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு ,  அதிகபட்சமாக 197 hp பவர், 320 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் திறன் 0 -100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்த காரின் பாதுகாப்பு குறித்தான விபரத்தில் முன் மற்றும் பக்கவாட்டில் ஏர்பேக், அவசரகால பிரேக்கிங் வசதி, லேன் மாறுதலை எச்சரிக்கும் வசதி, கார்னரிங் பிரேக் சென்சார், பாதசாரிகள் குறுக்கே வருவது உணர்ந்து எச்சரிக்கும் என பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கியது.

பிஎம்டபிள்யூ ஐடிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12 ஸ்பீக்கர்களை ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உட்பட 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் கொண்டிருக்கின்றது.

பிஎம்டபிள்யூ Z4 காரின் எஸ்டிரைவ்20ஐ – ரூ.64,90,000

எம்40ஐ வேரியண்ட்டிற்கு ரூ.78,90,000

(எக்ஸ்-ஷோரூம் )

Exit mobile version