Home Car News

BS-VI டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா விற்பனைக்கு வெளியானது

bs6 Innova Crysta

பிஎஸ் 6 என்ஜினை பெற்றதாக பிரசத்தி பெற்ற எம்பிவி மாடலான டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ரூ.15.36 லட்சம் முதல் துவங்குகின்றது. இந்தியாவில் 15 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள டொயொட்டா இன்னோவா காரின் செலிபிரேட்டரி விலையில் முன்பதிவு பிஎஸ் 6 மாடல்களுக்கு துவங்கியுள்ளது.

15 ஆண்டுகளில் இன்னோவா காரின் விற்பனை எண்ணிக்கை 9,00,000 இலக்கை கடந்து இந்தியாவின் பீரிமியம் எம்பிவி சந்தையின் முதன்மையான மாடலாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இதில் இன்னோவா கிரிஸ்டா கார்களின் எண்ணிக்கை மட்டும் 2,70,000 யூனிட்டுகளாகும். பெட்ரோல், டீசல் என இரண்டிலும் பிஎஸ் 6 என்ஜின் பொருத்தபட்டு விள்பனைக்கு வெளியிடபட்டுள்ள நிலையில் டெலிவரி பிப்ரவரி மாத இறுதியில் பிஎஸ்6 எரிபொருள் அறிமுகத்திற்கு பிறகே படிப்படியாக நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும் என டொயோட்டா உறுதிப்படுத்தியுள்ளது.

இன்னோவா கிரிஸ்டா மற்றும் டூரிங் ஸ்போர்ட் என இரண்டிலும் பொருத்தப்பட்டுள்ள 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என இரண்டிலும் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டாவின் இன்னோவா கிரிஸ்டா பிஎஸ் 6 என்ஜின்களுக்கு மாற்றியப் பிறகு அதிகப்படியான விலை உயர்வை கண்டுள்ளது. பிஎஸ் 6 பெட்ரோல் இன்னோவா கிரிஸ்டா வேரியண்ட்டைப் பொறுத்து வரை ரூ .31,000 முதல் ரூ .66,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னோவா கிரிஸ்டா டீசலுக்கான விலை ரூ .59,000 முதல் ரூ .1.3 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இதற்கிடையில், இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் ரூ .41,000 முதல் ரூ.1 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டொயோட்டா இந்த விலையை ‘செலிபிரேட்டரி விலை’ என குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட விற்பனை எண்ணிக்கையை கடந்த பிறகு மீண்டும் விலை உயர்த்த உள்ளது.

பிஎஸ் 6 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ரூ.15.36 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.24.06 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி). நாடு முழுவதும் உள்ள முன்னணி நகரங்களின் டொயோட்டா டீலர்கள் மூலம் பிஎஸ்6 இன்னோவா காருக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

 

Exit mobile version