பிஎஸ்-6 டட்சன் கோ, கோ பிளஸ் காரின் மைலேஜ், என்ஜின் விபரம்

மிகவும் விலை குறைந்த டட்சன் கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ பிளஸ் எம்.பி.வி காரின் பிஎஸ்-6 என்ஜின் பெற்ற மாடலின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. விலை தற்போது அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பிஎஸ்-6 மாசு விதிகளுக்கு உட்பட்ட மாடலை டட்சன் நுட்ப விபரங்களை வெளியிட்டுள்ளது. இது தவிர, இந்நிறுவனம் மற்றொரு மாடலான ரெடி-கோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பிஎஸ்6 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 5000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 68 ஹெச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க்கினை 4000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும்.

6000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 77 ஹெச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க்கினை 4400 ஆர்பிஎம்-ல்  சிவிடி ஆப்ஷனை கொண்டிருக்கின்றது.

கோ மற்றும் கோ பிளஸ் காரில் D, A, A (O), T மற்றும் T (O) என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்,  T மற்றும் T (O) என இரு வேரியண்டுகளில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

முந்தைய பிஎஸ்4 மாடலை விட இப்போது சற்று குறைவான மைலேஜ் வழங்குகின்றது.

கோ மேனுவல் – ஒரு லிட்டருக்கு 19.02 கிமீ

கோ சிவிடி  – ஒரு லிட்டருக்கு 19.59 கிமீ

கோ பிளஸ் மேனுவல் – ஒரு லிட்டருக்கு 19.02 கிமீ

கோ பிளஸ் சிவிடி – ஒரு லிட்டருக்கு 18.57 கிமீ

முந்தைய மாடலை விட அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கின்ற இரு மாடல்களும் ஏபிஎஸ், இபிடி, டூயல் ஏர்பேக் மற்றும் இஎஸ்பி உடன் பார்க்கிங் சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளது.

Exit mobile version