பிஎஸ் 6 டட்சன் கோ, டட்சன் கோ பிளஸ் விற்பனைக்கு வெளியானது

0

datsun go bs6

பாரத் ஸ்டேஜ் 6 (பிஎஸ்-6) மாசு விதிகளுக்கு உட்பட்ட டட்சன் நிறுவனத்தின் கோ மற்றும் கோ பிளஸ் என இரு மாடல்களின் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Google News

கோவிட்-19 தொற்று நெருக்கடியில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட புதிய மாடல்களுடன் கூடுதலாக சிறப்பு 100 % ஃபைனான்ஸ் வசதியை வழங்குகின்றது. இந்த இரு மாடல்களுக்கும் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள சலுகையில் இப்போது வாங்கவும், 2021 முதல் தவனையை செலுத்தவும்’ (‘Buy Now and Pay In 2021’) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் கார்களின் தோற்ற அமைப்பில் எவ்விதமான மாறுதல்களும் ஏற்படுத்தப்படவில்லை. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 5000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 68 ஹெச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க்கினை 4000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும்.

6000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 77 ஹெச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க்கினை 4400 ஆர்பிஎம்-ல்  சிவிடி ஆப்ஷனை கொண்டிருக்கின்றது.

datsun go interioro

கோ, கோ பிளஸ் மேனுவல் – ஒரு லிட்டருக்கு 19.02 கிமீ

கோ சிவிடி  – ஒரு லிட்டருக்கு 19.59 கிமீ

கோ பிளஸ் சிவிடி – ஒரு லிட்டருக்கு 18.57 கிமீ

கோ மற்றும் கோ பிளஸ் காரில் D, A, A (O), T மற்றும் T (O) என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்,  T மற்றும் T (O) என இரு வேரியண்டுகளில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

BS6 Datsun GO Price

Datsun GO MT – ரூ. 3.99 லட்சம்
Datsun GO CVT – ரூ. 6.25 லட்சம்
Datsun GO+ MT – ரூ. 4.20 லட்சம்
Datsun GO+ CVT – ரூ. 6.70 லட்சம்

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கின்ற இரு மாடல்களும் ஏபிஎஸ், இபிடி, டூயல் ஏர்பேக் மற்றும் இஎஸ்பி உடன் பார்க்கிங் சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளது.

போட்டியாளர்களைப் பொறுத்தவரை, டட்சன் கோ காருக்கு நேரடியான போட்டியை ஹூண்டாய் சாண்ட்ரோ, டாடா டியாகோ , மாருதி சுசுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுசுகி செலிரியோ போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது. அதே நேரத்தில் கோ + எம்.பி.வி யின் மிக நேரடியான போட்டியாளர் மாடலாக 7 இருக்கைகள் கொண்ட ரெனால்ட் ட்ரைபர் விளங்குகின்றது.