பிஎஸ்6 ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

jeep compass

பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஜீப் காம்பஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ள மாடல் முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ.25,000 வரை பெட்ரோல் மாடல்களும், ரூ.1.11 லட்சம் வரை டீசல் என்ஜின் கொண்ட மாடல்களும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்6 என்ஜினை பெற்ற மாடல்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ஆட்டோமேட்டிக் பெற்ற புதிய காம்பஸ் டீசல் தானியங்கி 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டதாக இயங்குகிறது இப்போது பிஎஸ் 6 விதிமுறைகளை பூர்த்தி செய்கிறது. 170 PS பவர் வழங்க 3750 RPM மற்றும் 350 Nm டார்க் வங்க 1500-2500RPM-ல் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 9-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் செயல்படுகிறது. மேலும் கூடுதலாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

அடுத்து பெட்ரோல் மாடலில் 163 hp பவருடன்,  250 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

தற்போது அனைத்து வேரியண்டிலும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் ஆட்டோமேட்டிக்கில் க்ரூஸ் கன்ட்ரோல் இணைக்கப்பட்டுள்ளது.

டாப் வேரியண்ட் டீசல் ஆட்டோமேட்டிக் ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ் வேரியண்டில் சிறப்பம்சங்கள் 8.4 அங்குல யுகனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரட்டை பேனல் சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர், 18 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version