பிஎஸ்-6 மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி விற்பனைக்கு வந்தது

Mahindra Marazzo BS6

மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற மராஸ்ஸோ எம்பிவி ரக மாடலை விற்பனைக்கு ரூ.11.25 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.13.59 லட்சம் வரையில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.1.26 லட்சம் வரை விலை உயர்ந்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பிஎஸ்-6 மாடலில் முன்பாக இடம்பெற்று வந்த சில வேரியண்டுகள் நீக்கப்பட்டு, இப்போது M2, M4+ மற்றும் M6+ மட்டும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. மராஸ்ஸோ, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 123hp மற்றும் 300Nm டார்க் உருவாக்கும். 6 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ், அனைத்து வகையான கார்களும் எர்பேக்ஸ், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, ரியர் பார்க்கிங் சென்சாரை கொண்டிருக்கிறது.

லெதர் சீட், 7.0 அங்குல தொடுதிரை, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் மூன்று வரிசைகளுக்கு ஏசி வெண்ட்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டேடைம் ரன்னிங் லைட், 17 அங்குல அலாய் வீல் போன்றவற்றை கொண்டுள்ளது.

mahindra Marazzo BS6 Dashboard

இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாருதி எர்டிகா, இன்னோவா கிரிஸ்டா  மாடல்களை எதிர்கொள்கின்ற மராஸ்ஸோ இப்போது இரு மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் டீசல் ஆட்டோமேட்டிக் மற்றும் பெட்ரோல் என்ஜின் பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

M2 – ரூ. 11.25 லட்சம் (7 & 8 இருக்கை)

M4+ – ரூ. 12.37 லட்சம் (7 இருக்கை)

M4+ – ரூ. 12.45 லட்சம் (8 இருக்கை)

M6+ – ரூ. 13.51 லட்சம் (7 இருக்கை)

M6+ – ரூ. 13.59 லட்சம் (8 இருக்கை)