பிஎஸ் 6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி அறிமுகமானது

0

bs6 mahindra scorpio

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள பிஎஸ் 6 ஸ்கார்ப்பியோ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. S5, S7, S9 மற்றும் S11 என மொத்தம் நான்கு வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால் பிஎஸ்6 வாகனங்களை மஹிந்திரா உற்பத்தி மேற்கொள்ளவில்லை என்பதனால் விலை இப்போது அறிவிக்கப்பட வில்லை.

Google News

முன்பாக விற்பனை செய்யப்பட்ட S3 பேஸ் வேரியண்டில் இடம் பெற்றிருந்த 2.5 லிட்டர் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது. மற்றபடி தொடர்ந்து 2.2 mHawk டீசல் என்ஜின் பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட்டு 140hp பவர் மற்றும் 320Nm டார்க் வழங்குகின்றது இதில் பேஸ் வேரியண்ட் S5-ல் மட்டும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸூம், மற்றவை 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளன.

S5 மாடலில் 7 இருக்கை அல்லது 9 இருக்கை ஆப்ஷன், மற்ற வேரியண்டுகளில் 7 இருக்கை அல்லது 8 இருக்கை பெற்று பக்கவாட்டில் எதிர் எதிர் இருக்கைகளாகவும், S11 வேரியண்டில் 7 இருக்கை வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 ஸ்கார்ப்பியோவில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. விலை பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 போன்றவை அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வெளியாகவுள்ளது.