ரூ.12.56 லட்சத்தில் பிஎஸ்-6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விலை துவக்கம்

0

bs6 mahindra scorpio

முன்பே பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி நுட்பவிபரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது காரின் ஆரம்ப விலை ரூ.12.56 லட்சம் முதல் ரூ.16.18 லட்சத்தில் நிறைவடைகின்றது.

Google News

முன்பா விற்பனையில் உள்ள காரின் தோற்ற வடிவமைப்பிலே தொடர்ந்து பிஎஸ் 6 என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ள ஸ்கார்ப்பியோ எஸ்யூவி மாடலில் 2.2 mHawk டீசல் என்ஜின் பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட்டு 140hp பவர் மற்றும் 320Nm டார்க் வழங்குகின்றது இதில் பேஸ் வேரியண்ட் S5-ல் மட்டும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸூம், மற்றவை 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளன.

இப்போது இந்த மாடலில் பேஸ் வேரியண்ட் எஸ்3 நீக்கப்பட்டு, ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் நீக்கப்பட்டுள்ளது. S5, S7, S9 மற்றும் S11 என மொத்தம் நான்கு வகைகளில் உள்ளது.

S5 மாடலில் 7 இருக்கை அல்லது 9 இருக்கை ஆப்ஷன், மற்ற வேரியண்டுகளில் 7 இருக்கை அல்லது 8 இருக்கை பெற்று பக்கவாட்டில் எதிர் எதிர் இருக்கைகளாகவும், S11 வேரியண்டில் 7 இருக்கை வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 ஸ்கார்ப்பியோவில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

Ex-Showroom Prices S5
BS6
S7
BS6
S9
BS6
S11
BS6
Chennai ₹.12,56,631 ₹.14,28,766 ₹.15,01,812 ₹.16,18,182