Home Car News

மாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் அறிமுகம்

wagon r

இந்தியாவில் ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜினை பெற்ற 1.0 லிட்டர் மாருதி சுசுகி வேகன் ஆர் காரின் விலை ரூ.8,000 வரை உயர்த்தப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது.

சிறிய ரக டீசல் கார் தயாரிப்பினை மாருதி சுசுகி கைவிட உள்ளதால் பெட்ரோல் வேரியண்டுகள் மட்டும் பிஎஸ் 6 நடைமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 6 (Bharat Stage-VI) மாசு உமிழ்வு தரத்துக்கு இணையான என்ஜின் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.

வேகன்ஆரில் உள்ள அனைத்து வேரியன்டிலும் டூயல் ஏர்பேக் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி மற்றும் ரியர்பார்க்கிங் சென்சார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்டில் ஹை ஸ்பீடு அலர்ட், இருக்கை பட்டை ப்ரீ ட்ன்ஸர் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான புதுப்பிக்கப்பட்டுள்ள K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது. முந்தைய பிஎஸ்4 மாடல் மைலேஜ் 22.5 கிமீ வழங்கி வந்த நிலையில் தற்போது 21.79 கிமீ ஆக குறைந்துள்ளது.

மாருதியின் வேகன் ஆர் 1.2 லிட்டர் மாடல் விலை ரூ. 5.10 லட்சம் முதல் ரூ. 5.91 லட்சம் வரையிலும், 1.0 லிட்டர் பெற்ற மாடல் விலை ரூ. 4.42 லட்சம் முதல் ரூ. 5.41 லட்சம் வரை விற்பனைக்கு (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கிடைக்கும்.

Exit mobile version