ரூ.5.25 லட்சத்தில் பிஎஸ்6 மாருதி வேகன் ஆர் எஸ் சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

Maruti WagonR front

பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை பெற்று உள்ள அடுத்த எஸ் சிஎன்ஜி மாடலாக மாருதி சுசுகி வேகன் ஆர் ரூபாய் 5 லட்சத்து 25 ஆயிரம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. முன்பாக இந்நிறுவனம் எர்டிகா மற்றும் அல்ட்டோ கார்களில் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டு வந்திருக்கின்றது.

தற்போது வந்துள்ள வேகன் ஆர் எஸ் சிஎன்ஜி மாடல் LXi, மற்றும் LXi(O) என இரு விதமான வேரியண்டில் கிடைக்கின்றது. 1.0 லிட்டர் எஸ்-சிஎன்ஜி என்ஜின் அதிகபட்சமாக 59hp பவர் மற்றும் 78Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 32.5 கிமீ பயணத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகன் ஆர் காரை பொறுத்தவரை இந்தியளவில் 24 லட்சத்துக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள எஸ்-சிஎன்ஜி ஆப்ஷன் இந்த வாகனத்தின் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Wagon R S-CNG LXi – ரூ. 5.25 லட்சம்

Wagon R S-CNG LXi(O) – ரூ. 5.32 லட்சம்