Automobile Tamil

பிஎஸ்6 எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு வெளியானது

mg hector suv

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 என்ஜினை பெற்ற மாடலாக ஹெக்டர் பெட்ரோல் என்ஜின் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு பிறகு டீசல் என்ஜின் கொண்ட மாடல் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையானதை பெற உள்ளது.

முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட ரூ.26,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை ஸ்டைல் வேரியண்டிற்கு ரூ 12.74 லட்சம் தொடங்கி, டாப் ஷார்ப் பெட்ரோல் டி.சி.டி-க்கு ரூ .17.44 லட்சம் வரை கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இரு விதமான ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. தற்போது BS6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டதாக பெட்ரோல் என்ஜின் வந்துள்ளது.

143hp குதிரைத்திறன் மற்றும் 250Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜினில் மட்டும் 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்க உள்ளது. மைல்ட் ஹைபிரிட் வசதி மூலம் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

மற்றபடி எந்தவிதமான வசதிகளும் இணைக்கப்படவில்லை. விற்பனையில் கிடைத்து வருகின்ற மாடலில் உள்ள வசதிகளை தொடர்ந்து கொண்டுள்ளது.

பிஎஸ்6 எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்

Style MT- ரூ.12.74 லட்சம்

Super MT- ரூ.13.54 லட்சம்

super MT- ரூ.14.14 லட்சம் (ஹைபிரிட்)

smart MT – ரூ.15.24 லட்சம் (ஹைபிரிட்)

smart DCT- ரூ.15.94 லட்சம்

Sharp MT- ரூ.16.54 லட்சம் (ஹைபிரிட்)

Sharp DCT- ரூ.17.44 லட்சம்

(எக்ஸ்ஷோரூம்)

Trim பிஎஸ்4 பிஎஸ்6 வித்தியாசம்
Style (manual) INR 13.48 லட்சம் INR 13.88 லட்சம் INR 40,000
Super (manual) INR 14.48 லட்சம் INR 14.88 லட்சம் INR 40,000
Smart (manual) INR 15.88 லட்சம் INR 16.33 லட்சம் INR 45,000
Sharp (manual) INR 17.28 லட்சம் INR 17.73 லட்சம் INR 45,000
Exit mobile version