ரூ.16,000 வரை டாடா அல்ட்ரோஸ், டியாகோ மற்றும் நெக்ஸான் விலை உயர்வு

0

tata altroz car red color 1

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற மாடல்களான அல்ட்ரோஸ், டியாகோ மற்றும் நெக்ஸான் என அனைத்தின் விலையும் சராசரியாக ரூ.3,000 முதல் அதிகபட்சமாக ரூ.16,000 வரை வேரியண்ட் வாரியாக விலையை உயர்த்தியுள்ளது. இந்த பட்டியலில் டிகோர் விலை ரூ.36,000 வரை குறைந்துள்ளது.

டாடா அல்ட்ரோஸ் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட பிறகு முதன்முறையாக தற்போது ரூ.16,000 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டு இப்போது அல்ட்ரோஸ் விலை ரூ.5.44 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.35 லட்சம் வரை விற்பனைக்கு துவங்கப்பட்டுள்ளது.

டாடாவின் நெக்ஸான் எஸ்யூவி காரின் விலை இப்போது ரூ.6.99 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12.20 லட்சம் வரை விற்பனைக்கு வந்துள்ளது.

அடுத்தப்படியாக டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.4.69 லட்சம் முதல் துவங்கி ரூ.6.73 லட்சம் வரை நிறைவடைகின்றது. முந்தைய விலையை விட ரூ.9,000 முதல் ரூ.13,000 வரை விலை உயர்ந்துள்ளது.

டிகோர் செடான் காரின் பேஸ் வேரியண்ட் ரூ.36,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவோ இப்போது டாடா டிகோரின் விலை ரூ.5.39 லட்சம் முதல் ரூ.7.49 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.