டைஹட்சூ ராக்கி எஸ்யூவி கார் அறிமுகம் – 2019 டோக்கியோ மோட்டார் ஷோ

0

Daihatsu Rocky SUV

46வது டோக்கியோ மோட்டார் ஷோவில் டொயோட்டா நிறுவனத்தின் டைஹட்சூ பிராண்டில் ராக்கி காம்பாக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா ரைஸ் என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் இந்த மாடல் விற்பனைக்கு செல்ல உள்ளது. இந்தியா வருகை குறித்து உறுதியான தகவல் இல்லை.

Google News

2017 டோக்கியோ ஷோவில் வெளிப்படுத்தப்பட்ட DN Trec கான்செப்ட் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்ட டைஹட்சூ ராக்கி காரில் 98 ஹெச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு என்ஜினுடன் சிவிடி கியர்பாக்ஸ் பெற்று ஃபிரென்ட் அல்லது ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற வாய்ப்புள்ளது.

ராக்கி காம்பாக்ட் எஸ்யூவி காரில் மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று பிரீமியம் லுக் வெளிப்படுத்தும் வகையில் ஸ்டைலிங் எல்இடி ரன்னிங் விளக்குகள், கருப்பு இன்ஷர்ட்டை பெற்ற ஹெட்லைட் மற்றும் பனி விளக்குகளை கொண்டுள்ளது.  ராக்கியில் வழங்கப்பட்டுள்ள 17 அங்குல அலாய் வீல், உயரமான வீல் ஆர்சு, பக்கவாட்டு உட்பட முன் மற்றும் பின்புறத்தில் பாடி கிளாடிங்கை கொண்டுள்ளது.  பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு, நேரத்தியான லைசென்ஸ் பிளேட் அறை மற்றும் பின்புற பம்பர் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

Daihatsu Rocky compact SUV

இன்டிரியர் அமைப்பில் கிரே நிறத்திலான டேஸ்போர்டினை பெற்று அலுமினியம் பிட் கொண்ட ஸ்டீயரிங் மற்றும் ஏசி வென்ட்ஸ், மிதக்கும் வகையிலான 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. 980 கிலோ எடை கொண்ட இந்த காரினை டொயோட்டாவின் TNGA பிளாட்பாரத்தை அடிப்படையாக DNGA தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300 மற்றும் நெக்ஸான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ள டைஹட்சூ ராக்கி இந்தியாவில் டொயோட்டா ரைஸ் என்ற பெயரால் வெளியாகலாம். ஆனால் இந்தியா வருகை உறுதி செய்யப்படவில்லை.

Daihatsu Rocky compact SUV Daihatsu Rocky compact SUVimage source – bestcarweb.jp