இந்தியா வரவுள்ள டட்சன் கிராஸ் கார் அறிமுக தேதி விபரம்

Datsun Cross teaserவருகின்ற ஜனவரி 18, 2018 யில், சர்வதேச அளவில் நிசான் நிறுவனத்தின் துனை பிராண்டான டட்சன் பிராண்டில் டட்சன் கிராஸ் என்ற க்ராஸ்ஓவர் ரக மாடல் ஒன்றை இந்தோனேசியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டட்சன் கிராஸ்

datsun go cross concept front grile

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டட்சன் கோ கிராஸ் என காட்சிப்படுத்தபட்ட இந்த மாடல் தற்போது கோ என்பதனை இழந்து கிராஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீசரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தின் வாயிலாக கான்செப்ட் நிலைக்கு ஏற்ற வகையிலே, மிக நேர்த்தியாக வெளியாகியுள்ள  புராஜெக்டர் முகப்பு விளக்குடனே வந்து எல்இடி ரன்னிங் விளக்கின் மிக அருகாமையிலே பனி விளக்குகள் அதைய பெற்றிருப்பதுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள முகப்பு கிரில் கொண்டுள்ளது. முகப்பு அமைப்பு மிக நேர்த்தியான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் என்பதனால் வாடிக்கையாளர்களை விரைவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த காரில் இந்நிறுவனத்தின் மற்ற மாடல்களான கோ, கோ பிளஸ் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம். இது அதிகப்சமாக 68 பிஎஸ் ஆற்றல் மற்றும் 104 என்எம் டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

datsun go cross concept side

இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள டட்சன் க்ராஸ் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ் போ அரங்கில் காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

datsun go cross concept tail light Datsun GO cross concept alloy wheel