ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்.யு.வி விற்பனைக்கு வெளியானது

ரூ.12.99 லட்சம் விலையில் புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்.யு.வி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மாடலில் மெர்சிடிஸ் OM 611 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. #GurkhaXtreme

முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களுக்கான டிஃபரன்ஷியல் லாக்கிங் வசதியுடன் வந்துள்ள புதிய குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்.யு.வி மாடல் சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்குகின்ற இந்த காரில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் மெர்சிடிஸ் OM 611 நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 140HP பவர் மற்றும் 321 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமையை பெற்றதாக அமைந்தள்ளது. இதில் மெர்சிடிஸ் இருந்து பெறப்பட்ட 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முழுமையான ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்கும் நோக்கில் இடம்பெற்றுள்ள டிஃபரன்ஷியல் லாக் அமைப்புடன், மிக சிறப்பான மைலேஜ் தரவல்ல 2 வவீல் டிரைவ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மற்ற குர்கா எக்ஸ்புளோர் மற்றும் எக்ஸ்பிடியேஷன் போன்றவற்றில் இருந்து வித்தியாசப்படும் வகையில் எல்இடி டர்ன் இன்டிகேட்டர், முன் மற்றும் பின்புற பம்பர்கள் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டு , விங்க் மிரர் மற்றும் பாடி ஸ்டிக்கரிங் கொண்டதாக அமைந்துள்ளது.

மேலும் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி மாடலில் 550mm  நீரிலும் பயணிக்கும் திறன் கொண்டிருப்பதுடன் 40 டிகிரி கோண சரிவு சாலையிலும் பயணிக்கும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்.யு.வி விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

 

Exit mobile version