2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்டஇந்தியாவின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஈகோஸ்போர்ட் எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட முன்பதிவு நவம்பர் 5ந் தேதி முதல் அமேசான் இணையதளத்தில் நடைபெற உள்ளது.

2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட்

2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட

புதிய ஈக்கோஸ்போர்ட் மாடல் முன்பதிவு நவம்பர் 5 ந் தேதி முதல் அமேசான் இந்தியா ஆன்லைன் இணையதளத்தில் ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக முன்பதிவு செய்யப்படும் 123 வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி வழங்கப்பட உள்ளது.

புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் புதிய 1.5 லிட்டர் Ti-VCT (Twin Independent Variable Camshaft Timing) 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. இதுதவிர டீசல் எரிபொருள் தேர்வில் 100 ஹெச்பி குதிரைதிறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDCi டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 205 என்எம் டார்க் வழங்குகின்றது.

2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட

மொத்தம் 7 விதமான நிறங்களில் கிடைக்கின்ற ஈக்கோஸ்போர்ட்டில் ஆம்பியன்ட், டிரென்ட், டிரென்ட்+ , டைட்டானியம், மற்றும் டைட்டானியம் + ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கப்பெற உள்ளது.

வருகின்ற நவம்பர் 5 முதல் முன்பதிவு தொடங்குகின்ற ஈக்கோஸ்போர்ட் நவம்பர் 7ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட