ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் புதிய ஆட்டோ வேரியண்ட் அறிமுகம்

0

bs6 ford ecosport

தற்போது விற்பனையில் உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்டை விட ரூ.90,000 விலை குறைவாக ரூ.10.67 லட்சத்தில் டைட்டானியம் ஆட்டோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Google News

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் பிஎஸ்6 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 122 ஹெச்பி மற்றும் 149 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 5-வேக மேனுவல் அல்லது 6-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட ஈக்கோஸ்போர்ட்டில் 100 ஹெச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

டைட்டானியம் + ஆட்டோ வேரியண்டில் உள்ள சன் ரூஃப், 6 ஏர்பேக்குகள், ஆட்டோ வைப்பர், ஆட்டோ ஹெட்லைட்ஸ், ரியர் ஆர்ம் ரெஸ்ட் போன்றவை நீக்கப்பட்டுள்ளது. புதிய ஆட்டோ வேரியண்டில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஃபோர்டின் கனெக்ட்டிவிட்டி அம்சம் ஃபோர்டு பாஸ் இடம்பெற்றுள்ளது.