2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறிய அளவிலான தோற்ற மாறுதல்களை மட்டும் பெற்று ரூ.28.19 லட்சம் முதல் ரூ.32.97 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் பெறவில்லை.
இந்திய சந்தையில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 160 PS ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385 Nm ஆகும். 2 வீல் டிரைவ் கொண்டு 6 வேக மெனுவல் கியர் ஆப்ஷனில் உள்ளது.
200 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 3198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450 என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது. 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.
தற்போதைய மாடலின் அடிப்படையில் ஃபேஸ்லிஃப்ட் எண்டேவரில் முன்பக்க பம்பர், கிரில், ஹெடைலைட் அமைப்பு 7 ஏர்பேக்குகள், ஹீல் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் 18 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற டொயோட்டா ஃபார்சூனர், மஹிந்திரா அல்டுராஸ், இசுசூ MU-X, மிட்ஷூபிசி பஜெரோ ஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக ஃபோர்ட் எண்டேவர் விளங்க உள்ளது.
2.2-litre 4×2 MT Titanium – ரூ. 28.19 லட்சம்
2.2-litre 4×2 AT Titanium – ரூ. 30.60 லட்சம்
3.2-litre 4×4 AT Titanium+ – ரூ. 32.97 லட்சம்
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண…
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி…
இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்…
இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய்…
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக…
ரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய…