ராப்டெர் ஆற்றல் பெறுகிறது 2019 ஃபோர்டு F-150 லிமிட்டெட்

0

2019 ஃபோர்டு F-150 லிமிட்டெட் டிரக் குறித்த அறிவிப்பை ஃபோர்டு நிறுவனம் வட அமெரிக்காவில் வெளியிட்டது. இந்த டிரக்கள் அதிக அவுட்புட்களுடன் வெளியாக உள்ளது. மேலும், F-150 ராப்டெர் மற்றும் GT சூப்பர் கார் போன்று 3.5 லிட்டர் எக்கோபூஸ்ட் டுவின்-டர்போ V6 கொண்டதாகவும் இருக்கும்.

மிதமிஞ்சிய 335kW ஆற்றல் மற்றும் 691Nm டார்க்யூ கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய F-150 லிமிடெட், அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த அதிவேகம் கொண்ட லைட்-டூட்டி பிக்அப் கொண்டது என்று கூறப்படுகிறது.

Google News

இந்த F-150 மாடல்களில் பிக்அப்-க்கு ரியர் பம்பரில் ஸ்போர்ட்ஸ் டூயல் எக்ஸ்ஹஸ்ட் சிஸ்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த மாடல்களில் டிரைவர் அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் ஆக்டிவ் சேப்டி சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் அடிபிடிவ் குரூஸ் கண்ட்ரோல், ஸ்டாப்/கோ பங்கஷ்னை கொண்டுள்ளது. பாதசாரிகளை தெரிவிக்கும் ஆட்டோனம்ஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், 360 டிகிரி கேமரா சிஸ்டம் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலின் உள்புறத்தில், 22 இஞ்ச் அலாய் வீல், பிரான்ட் கிரில்களுக்காக ஸ்டைன் பிசிஷ், டைல்கேட் அப்பலிக்கு, விண்டோ ரிம்ஸ் மட்டும் ரிம் ஹான்டில்ஸ், பவர் இயங்கும் சைடு ஸ்டேப்களும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் F-150 லிமிட்டெட்களில் டூவின் பேனல் சன்-ரூப், கேமல் பிளாக் இரண்டு நிறங்களில் லெதர் டிரிம், Miko suede ஹெட்லைனர், லெதர் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மல்டி கலரில் முன்புற சீட்கள், முன்புற சீட்களை வெப்பமாக மற்றும் குளிராக வைத்து கொள்ளும் வேட்டிலேட், ஹீட்டாட் ஸ்டியரிங் வீல் மற்றும் “ஆஷ் சுவரல்” உட் டிரிம் இன்செர்ட்ஸ் ஆகியவை இடம் பற்றுள்ளது.

இதுமட்டுமின்றி ஃபோர்டு, சாட்டிலைட் நேவிகேஷன், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ, ஃபோர்டுஅப்லிங்க், 4GLTE இணைப்பு மற்றும் 10 டிவைஸ்களை இணைக்கும் வகையிலான வை-பை ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட 3 இன்போடைன்மென்ட்களை கொண்டுள்ளது. கூடுதலாக, Bang & olufsen சவுன்ட் சிஸ்டமும் பொருத்தப்பத்டுள்ள்ளது.

இந்த 2019 ஃபோர்டு F-150 லிமிட்டெட் மாடல்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதும், ஆற்றல் குறைவாக உள்ள MY18 வெர்சன் மாடல்கள் 4,176,174.38 ரூபாய் என்று ஃபோர்டு நிறுவனத்தின் வட அமெரிக்கா இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மாடல்கள் இதை விட அதிகமாக இருக்கும் என்று எதிரபார்கப்படுகிறது.