Automobile Tamilan

482 கிமீ ரேஞ்சு.., ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எஸ்யூவி அறிமுகமானது

ford mustang mach-e

55 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட அமெரிக்காவின் மஸில் ரக மஸ்டாங் காரின் அடிப்படையில் ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார் மஸ்டாங் மாக்-இ ஆனது முதல் தலைமுறை மஸ்டாங்கின் மாக் -1 மாறுபாட்டால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்படதாகும்.

ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்ற மாக்-இ காரில் மொத்தம் 5 விதமான வேரியண்டுகள் கிடைக்கின்ற நிலையில் மாக்-இ ஜிடி வேரியண்ட் மட்டும் பிறகு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஸ்டாண்டர்டு ரேஞ்சு , எக்ஸ்டென்டேட் ரேஞ்சு என இரு மாறுபட்ட பேட்டரியை கொண்டதாக அமைந்துள்ளது. ஒற்றை மோட்டார் கொண்ட ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனில் 75.7 கிலோவாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக  255 ஹெச்பி பவர் மற்றும் 414 என்எம் டார்க் வழங்குகின்றது. 0 -100 கிமீ வேகத்தை 6 விநாடிகளுக்குள் எட்டிவிடும்.

அடுத்ததாக, ஜிடி மாடலில் பொதுவாக 98.8 கிலோவாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 459 ஹெச்பி பவர் மற்றும் 830 என்எம் டார்க் வழங்குகின்றது. 0 -100 கிமீ வேகத்தை 3 விநாடிகளுக்குள் எட்டிவிடும்.

மஸ்டாக் மாக்-இ காரின் ரேஞ்சு 337 கிமீ முதல் தொடங்கி 370 கிமீ, 434 கிமீ மற்றும் அதிகபட்சமாக 482 கிமீ ரேஞ்சு வரை வழங்குகின்றது. இதில் டாப் பெர்ஃபாமென்ஸ் ரக ஜிடி மாடல் 378 கிமீ ரேஞ்சு வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்டாங் மாக்-இ காரின் தோற்ற அமைப்பினை பொறுத்தவரை மிக ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் முன்புற கிரில் அமைப்பு நீட்டிக்கப்பட்ட பானெட் மற்றும் எஸ்யூவி காருக்கு உரித்தான தோற்ற பொலிவினை வழங்கும் வகையிலான அமைப்பினை கொண்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் ரேடிக்லர் டிசைன் கொண்டு டெஸ்லா பாணியில் செங்குத்தாக பொருத்தப்பட்ட 15.5 அங்குல தொடுதிரை மூலம் சிறப்பு பசை பயன்படுத்தி ஒரு ரோட்டரி டயல் பொருத்தப்பட்டுள்ளது. காரின் பல அமைப்புகள் திரையின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது புதிய சிங் 4 இயக்க முறைமையைப் பயன்படுத்தப்பட்டு ஏர் டூ அப்டேட் வழங்கப்படுகின்றது. கூடுதலாக 10.2 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டுள்ளது.

Exit mobile version