ஏப்ரல் 2-ல் ஃபோர்டின் புதிய கூகா எஸ்யூவி அறிமுகமாகிறது

ford kuga news in tamil

வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஃபோர்டு எஸ்யூவி காரின் பெயர் கூகா (Ford Kuga) என அழைக்கப்படலாம். இந்த எஸ்யூவி இந்திய சந்தையில் ஈகோஸ்போர்ட் மாடலுக்கு மேலாக விற்பனைக்கு அறிவிக்கப்படும்.

சர்வதேச அளவில் ஒரு சில நாடுகளில் எஸ்கேப் என்ற பெயருடனும், கூகா அல்லது பூமா என்ற பெயருடன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

புதிய கூகா எஸ்யூவி இந்தியா வருகை

ரோமானிய ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் இந்த எஸ்யூவி பெயர் Kuga என உறுதி செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள ஃபோர்டின் ஃபியஸ்டா காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ள இந்த எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்கும். இதுதவிர பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷன் மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

மேலும் வாசிக்க:- ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி விலை விபரம்

சர்வதேச அளவில் ஏப்ரல் 2 ஆம் தேதி ஃபோர்டு கூகா (ஒரு சில நாடுகளில் ஃபோர்டு எஸ்கேப்) என அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த எஸ்யூவி கார் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகாலாம்.