புதிய கார்னிவல் காரை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்

Fourth-generation Kia Carnival
நான்காம் தலைமுறை கியா கார்னிவல்

நான்காம் தலைமுறை கியா கார்னிவல் ஆடம்பர எம்பிவி ரக மாடலை பல்வேறு மேம்பாடுகளுடன் கூடுதலான வசதிகள் மற்றும் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் முதற்கட்டமாக தென்கொரியாவில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

இந்நிறுவனத்தின் எஸ்யூவி கார்களின் வடிவ தாத்பரியத்தைப் பின்பற்றி 2021 கார்னிவல் காரின் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கியாவின் பாரம்பரியமான ‘டைகர் நோஸ்’ கிரில் நைர்த்தியாக கொடுக்குப்பட்டுள்ளது. அதன் டைமன்ட் பேட்டரன் வடிவில் மத்தியில் வழங்கப்பட்டுள்ள ஸ்லாட்டுகள் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. மேலும் மிக நேர்த்தியான பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் அதன் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட் மிகச் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

மிக நீளமான பானெட்டை பெற்றுள்ள புதிய கார்னிவலில் இதன் A-பில்லர் அதன் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அடுத்தப்படியாக B,C, மற்றும் D பில்லர்களில் கருமை நிறம் சேர்க்கப்பட்டு மிதிக்கும் தோற்றத்தை ஏற்படுத்தும் மேற்கூறை அமைந்துள்ளது. இதனை கியா நிறுவனம் ஐலேண்ட் ரூஃப் என குறிப்பிடுகின்றது. புதிய வடிவத்திலான 19 அங்குல அலாய் வீல் இரட்டை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மற்றபடி பின்புறத்தில் பட்டையான லைட் பார், எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டு க்ரோம் ஃபூச்சூ ஸ்ட்ரீப் கொடுத்துள்ளனர். காரின் விற்பனையில் உள்ள தோற்றத்தை விட முற்றிலும் மேம்பட்டதாக அமைந்துள்ளது.

புதிய கியா கார்னிவல் காரின் இன்டிரியர் மற்றும் என்ஜின் விபரம் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான இன்டிரியர் தொடர்பான ஸ்பை படங்களில் புதுப்பிக்கப்பட்ட மிக நேர்த்தியான டேஸ்போர்டில் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வழக்கம் போல புதிய மாடலிலும் 4 இருக்கை கார்னிவல் முதல் அதிகபட்சமாக 11 இருக்கைகள் கொண்ட மாடல் வரை விற்பனைக்கு கிடைக்கும்.

2021 கியா கார்னிவல்

2.2 லிட்டர் டீசல் என்ஜின் உட்பட 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.6 லிட்டர் ஹைபிரிட் என்ஜின் வழங்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட மூன்றாவது தலைமுறை கார்னிவல் மாடல் தற்போது தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய சந்தைக்கு அனேகமாக 2021 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு கிடைக்கப் பெறலாம்.

Exit mobile version