மீண்டும் களமிறங்குகின்றது.., இம்முறை எலெக்ட்ரிக் ஹம்மர் EV அறிமுகமாகிறது

hummer ev teased

வரும் மே 20 ஆம் தேதி ஹம்மர் EV எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஜெனரல் மோட்டார்ஸ் முதல் டீசரை வெளியிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஹம்மர் திவாலானதை தொடர்ந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜிஎம்சி (GMC) பிராண்டில் ஹம்மர் EV அதிகபட்சமாக 1014 ஹெச்பி பவர், 15,592 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என முதற்கட்டமாக டீசர் வெளியிட்ட போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மிக சிறப்பான ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு வல்லமையை வெளிப்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிஎம்சி பிரீமியம் மற்றும் திறமையான டிரக்குகள் மற்றும் எஸ்யூவிகளை உருவாக்குகிறது” என்று ஜிஎம்சி துணைத் தலைவர் டங்கன் ஆல்ட்ரெட் கூறினார்.  இதன் அடுத்த கட்ட நகர்வாக “ஜிஎம்சி ஹம்மர் இவி இதை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.” என குறிப்பிட்டுள்ளார்.

புதிய மாடல் 2021 இறுதியில் மிச்சிகனில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் டெட்ராய்ட் ஹாம்ட்ராம் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டவுடன், ஹம்மர் EV மாடல் ரிவியன் ஆர் 1 மற்றும் டெஸ்லா சைபர்டிரக் மாடலுக்கு போட்டியாக விளங்கும்.

Exit mobile version