கிரேட் வால் மோட்டார்ஸ் உட்பட 3 சீன முதலீடுகளை நிறுத்தி வைத்த மகாராஷ்டிரா அரசு

இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக கடந்த வாரம் மூன்று சீன நிறுவனங்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

“மத்திய அரசுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவை முன்னர் கையெழுத்திடப்பட்டன (இந்தோ-சீனா எல்லையில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக). இனி சீன நிறுவனங்களுடன் மேலதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது ”என்று மஹாராஷ்ட்டிரா மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் குறிப்பிட்டுள்ளதாக, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ‘Magnetic Maharashtra 2.0’ என்ற நோக்கத்தை கொண்டு 12 ஒப்பந்தங்களை மஹாராஷ்டிரா அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றில் மூன்று முதலீடுகள் சீன நாட்டினை தலைமையகமாக கொண்டவையாகும்.

கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் புனே அருகே அமைந்துள்ள ஜிஎம் தலோகேன் ஆலையில் $1 பில்லியன் முதலீட்டை படிப்படியாக மேற்கொள்ள உள்ள நிலையில், முதற்கட்டமாக ரூ.3,770 முதலீடு செய்வதுடன், நேரடியாக 2042 பேரை வேலையில் சேர்க்க உள்ளதாக அறிவித்திருந்தது.

அடுத்து சீனாவின் பெய்க்கியூஃபோட்டான் மோட்டார் (BeiqiFoton Motor) என்ற நிறுவனம் எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பதற்காக ஹரியானாவின் பி.எம்.ஐ எலக்ட்ரோ மொபைலிட்டி (PMI Electro Mobility Solution) நிறுவனத்துடன் இணைந்து ரூ.1,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

சக்கனில் ஹெங்க்லி எக்யூப்மென்ட்ஸ் (Hengli Engineering) என்ற சீன நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் ஹைட்ராலிக் உபகரணங்களை தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருந்தது.

மொத்தமாக இந்த மூன்று சீன முதலீடுகளின் மதிப்பு ரூ.5,025 கோடியாகும். கடந்த ஜூன் 15 ஆம் மஹாராஷ்ட்டிரா அரசால் துவங்கப்பட்ட ‘Magnetic Maharashtra 2.0’ மூலமாக சுமார் ரூபாய் 16,023 கோடி முதலீட்டை பெற்றுள்ளது.

source 

Exit mobile version