Automobile Tamilan

விரைவில்., பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினுடன் ஹோண்டா சிட்டி அறிமுகம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பெற்ற புதிய ஹோண்டா சிட்டி கார் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியாகுவதனை உறுதிசெய்யும் வகையில் பவர் மற்றும் வேரியண்ட் விபரம் வெளியாகியுள்ளது.

முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற அதே SV, V, VX மற்றும் ZX என நான்கு விதமான வேரியண்டின் மூலம் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. பிஎஸ் 4 மாடல் பிஎஸ்6 முறைக்கு மேம்பட்டிருந்தாலும் பவரில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. பிஎஸ் 6 ஹோண்டா சிட்டி காரில் 1497சிசி பெட்ரோல் எனஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 119 ஹெச்பி பவரை வழங்குகின்றது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் முதற்கட்டமாக வெளியாக உள்ளது.

மேலும், புதிய என்ஜின் பெற்ற மாடல் விரைவாக தற்பொழுது கிடைக்கின்ற காரிலே பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தலைமுறை சிட்டி காரை இந்நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலே இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம்.

ஏப்ரல் 2020க்கு முன்பாக டீசல் என்ஜின் பெற்ற பிஎஸ் 6 சிட்டி மாடலும் வெளியாக உள்ளது. ஹோண்டா சிட்டி காருக்கு போட்டியாக இந்தியாவில் மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றன.

Exit mobile version