பிஎஸ்6 ஹோண்டா லிவோ டிஸ்க் வேரியண்ட் விலை வெளியானது

0

honda livo Imperial Red Metallic

110சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா லிவோ பைக்கின் டிரம் பிரேக் மாடலை டிஸ்க் பிரேக் பெற்ற வேரியண்ட் விலை ரூ.76,714 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 110சிசி சந்தையில் அதிக விலை பெற்ற மாடலாக இது விளங்குகின்றது.

Google News

முன்பாகவே விற்பனையில் கிடைக்கின்ற இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் பெற்ற மாடலை விட ரூ. 4,200 வரை கூடுதலாக அமைந்துள்ளது. லிவோ டிரம் பிரேக் விலை ரூ.72,514 ஆகும்.

பிஎஸ்-6 முறைக்கு மேம்பட்ட ஹோண்டா லிவோ பைக் மாடலில் உள்ள 110 சிசி இன்ஜின் PGM-FI HET (Honda Eco Technology) நுட்பத்துடன் அதிகபட்சமாக 8.67 hp பவரை 7500 ஆர்பிஎம்-லும், 9.30 Nm டார்க் 7500 ஆர்பிஎம்-ல் வழங்குகின்றது. தொடர்ந்து 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Enhanced Smart Power (eSP) சிஸ்டத்தை பெற்றுள்ளதால் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, குறைந்த உராய்வு மற்றும் எஃப்ஐ அம்சத்தைக் கொண்டுள்ளது.

மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடலாக லிவோ பைக் விளங்கும் என்பதனால் சராசரியாக 65 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது.

(கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் எக்ஸ்ஷோரூம் சென்னை விலை)