Site icon Automobile Tamil

வரும் 2023-24ல் EV-களை அறிமுகம் செய்கிறது ஹோண்டா மோட்டார்ஸ்

ஹோண்டா மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது எலக்ட்ரிக் வாகனங்களை வரும் 2023-2024ம் ஆண்டுகளில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. இதுகுறித்து வெளியான தகவலில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கொள்கைகளை அரசு வெளியிட உள்ளது. இதனால், ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் கடைபிடித்து வரும் கொள்கைகளில் மாற்ற செய்து புதிய கொள்கைகளின் படி எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம், எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆகையால், ஹோண்டா இந்தியா பெரியளவில் பெட்ரோல் கார்கள் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளது. மேலும், இந்தயாவில் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இந்த கார்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று தகவலை ஹோண்டா நிறுவனம் உறுதியாக தெரிவிக்கவில்லை.

இந்தியா மார்க்கெட்டில், எலக்ட்ரிக்கார்களை அறிமுக் செய்ய திட்டமிட்டுள்ள ஹோண்டா நிறுவனம், இதை நகர்புறங்களில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதுடன், தோராயமாக 150-200 km பயணிக்கும் வகையில் தயாரிக்க உள்ளது. இதுமட்டுமின்றி ஹைபிரிட் வெர்சன் குறித்தும் அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் திறன் குறித்தும் ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

இதுகுறித்து பேசிய ஹோண்டா கார் இந்தியா தலைவர் கேகு நாகாசாகி, எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும், இந்த அறிமுகம் செய்வதற்கான காலக்கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை. இந்த எலக்ட்ரிக் கார்கள் விற்பனையை அதிகரிக்க அதற்கு ஏற்ப சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைப்பது அவசியமாகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் சுற்றுச்சுழலை பாதிக்காத வாகனங்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யும் என்றார்.

Exit mobile version