எக்ஸ்பல்ஸ் 200 சவால்.., 200 சிசி பைக்கை உருவாக்கும் ஹோண்டா

2018 Honda CB Hornet 160R

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 200சிசி ஹீரோ பைக் மாடல்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் பைக்கினை ஹோண்டா நிறுவனம் அட்வென்ச்சர், ஃபேரிங் பைக் மற்றும் ஸ்டீரிட் நேக்டூ பைக்காகவும் விற்பனைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா நிறுவனம் 160சிசி சந்தையில் சிபி ஹார்னெட் 160ஆர் விற்பனை செய்யப்படுகின்ற மாடலுக்கு கூடுதலான சிசி கொண்ட மாடலை 200-300சிசி -க்கு உட்பட்ட  திறனில் என்ஜினை கொண்ட மாடலை அறிமுக செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், முதலாவதாக 200சிசி என்ஜின் பெற்ற அட்வென்ச்சர் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு நேரடி சவாலினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

200சிசி ஏர்கூல்டு என்ஜின் பெற்று அனேகமாக 19 ஹெச்பி பவரை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். முன்புறத்தில் 21 அங்குல வீல், பின்புறத்தில் 18 அங்குல வீல் பெற்றிருக்கும். சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா CRF250L என்ற மாடலுக்கு இணையான வடிவமைப்பினை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பஜாஜ் பல்சர், அப்பாச்சி 200 போன்ற மாடல்களுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம், எக்ஸ்பல்ஸ் 200 போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.

source – bikewale.com